‘மக்களின் சேவைக்காக’ என்ற பெயரில் பாஸ்போர்ட் பெறுவதற்கு ஆதார், அரசு வேலை பெறுவதற்கு ஆதார், ஓய்வூதியம் பெற ஆதார், பணமில்லா பரிவர்த்தனைக்கு ஆதார், வங்கிக் கடன் பெற ஆதார், தொடக்கப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க ஆதார், உயர் கல்வி பயில ஆதார், உயர் கல்விக்கான தகுதி தேர்வு எழுத ஆதார், பல்கலைக்கழகங்களில் தேர்வு எழுத ஆதார், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற ஆதார், பிறப்பு -& இறப்பு சான்றிதழ் பெறவும் ஆதார் என பெரும்பாலான அத்தியாவசிய சேவைகளில் ஆதார் கட்டாயாமாக்கப்பட்டுள்ளது.
ஆதாரின் தொடக்கம், அது ஏற்படுத்தியுள்ள பிரச்சனைகள், உச்சநீதிமன்ற தீர்ப்பின் சாதக பாதகங்கள் என அனைத்தையும் விரிவாகவே பதிவு செய்கிறது இந்நூல்.