அம்பேத்கரியர்கள் நெருக்கடியும் சவால்களும்
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்டுள்ள சிந்தனையாளரும் தலித், இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து களப்பணிகள் மேற்கொள்பவரும் மனித உரிமைப் போராளியுமான முனைவர் ஆனந்த் டெல்டும்டெ, பொதுவாக இந்தியாவிலும், குறிப்பாக மகாராஷ்டிரத்திலும் உள்ள தலித் இயக்கங்களின் (அம்பேத்கரிய இயக்கங்களின்) இன்றைய நிலை, அவை எதிர்கொள்ளும் நெருக்கடிகள், புரட்சிகரமான சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த அவை சந்திக்க வேண்டிய சவால்கள் ஆகியனவற்றை அண்ணல் அம்பேத்கர் நினைவுச் சொற்பொழிவொன்றின் மூலம் எடுத்துக் கூறுகிறார். அவரது கருத்துகளுடன் முழுமையாகவோ, ஓரளவோ ஒத்துப்போகாதவர்களும்கூட ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய பிரச்சனைகளை எழுப்புகிறார். தலித் (அம்பேத்கரிய) இயக்கங்கள் குறித்தும் அவர் கூறும் கருத்துகள் தமிழகத்தில் சாதி-ஒழிப்பு இயக்க மரபுக்கு உரிமை கொண்டாடும் பெரியாரிய இயக்கங்களுக்கும் பொருந்தும்.