அஞ்சலை அம்மாள் – ராஜா வாசுதேவன்

360

சுதந்திரப் போராட்டத்திற்காக ஒன்பது முறை சிறைத் தண்டனை பெற்றவர், பெல்லாரி, கண்ணனூர் என வெகுதூரங்களில் சிறைப்பட்டவர், நிறைமாத கர்ப்பிணியாகச் சிறையிலிருந்து பரோலில் வந்து குழந்தைப் பெற்றெடுத்தவர் எனப் பல அதிர்ச்சி கலந்த ஆச்சர்யங்களுக்குச் சொந்தக்காரர் அஞ்சலை அம்மாள்.

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

உலகம் அறிய வேண்டிய தியாக வரலாறு

கத்தியின்றி ரத்தமின்றி நடத்தப்பட்ட யுத்தமென்று சொன்னாலும் இந்தியச் சுதந்திரத்தின் தியாகம் மகத்தானது. சொல்லப்போனால் ரத்தம் சிந்திய போர்களைவிடவும் உயர்வானது.

இந்தியச் சுதந்திரத்தில் வ.உ.சி., சுப்ரமணிய சிவா போன்றவர்களின் தியாகமே வடமாநிலங்களில் பெரிதாகப் பேசப்படுவதில்லை. அதில் பங்காற்றிய பலருடைய தியாகங்கள் மறைக்கப்பட்ட சோகங்களும் உண்டு.
ஒன்பது முறை சிறைத் தண்டனை பெற்றவர், பெல்லாரி, கண்ணனூர் என வெகுதூரங்களில் சிறைப்பட்டவர், நிறைமாத கர்ப்பிணியாகச் சிறையிலிருந்து பரோலில் வந்து குழந்தைப் பெற்றெடுத்தவர் எனப் பல அதிர்ச்சி கலந்த ஆச்சர்யங்களுக்குச் சொந்தக்காரர் அஞ்சலை அம்மாள். திருமணம் ஆன காலம் தொடங்கி, இறக்கும் வரை காந்தியவாதியாக, சுத்தமான தேசியவாதியாக வாழ்ந்து காட்டியவர். ஆறு குழந்தைகளின் தாயான அஞ்சலை அம்மாள் தொடர்ந்து சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபடுவதும் சிறைக்குச் செல்வதுமாகவே வாழ்நாள் முழுக்கவே இருந்திருக்கிறார் என்பது இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பிரமிப்பானது.

ஏறத்தாழ ஆறு ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். தமிழகத்தில் சிறை சென்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் ஆண்களுக்கு நிகரான போராளி. இவரின் வரலாற்றைத் தகுந்த ஆதாரங்களுடன் தமிழ்த்தொலைக்காட்சி ஊடகங்களில் முக்கிய ஆளுமையாக விளங்கிய ராஜா வாசுதேவன் அவர்கள் விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார். இதற்கும் வாசகர்கள் தங்களது ஆதரவை வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது.

=============================

அஞ்சலை அம்மாளுக்கு நம் தமிழக வரலாற்றில் நிறைய முக்கியத்துவங்கள் இருக்கின்றன. தனது வாழ்க்கையையும் சொத்துக்களையும் இந்தியாவின் விடுதலைக்காக அர்ப்பணித்தவர். சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் சிறைவாசம் ஏற்றவர். வயிற்றில் பிள்ளையைச் சுமந்தபடியும், பெற்றெடுத்த பிள்ளையோடும் சிறையில் இருந்த அனுபவங்கள் இவருக்கு உண்டு. காந்தி, ராஜாஜி, பெரியார், ஓமந்தூர் ராமசாமி, காமராஜர் என முக்கியமான தலைவர்களோடு அரசியல் ஆலோசனை நடத்தியவர். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

இப்படி அஞ்சலை அம்மாளைப் பற்றி சொல்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. இவ்வளவு இருந்தும் அஞ்சலை அம்மாளைத் தமிழகம் அறிந்தது குறைவுதான். அஞ்சலை அம்மாளைப் பற்றி வெவ்வேறு புத்தகங்களில் குறிப்புகள் இருந்தாலும் அவருடைய முழுமையான வரலாற்றைப் பேசும் புத்தகம் ஒன்று வெளியாவது இதுதான் முதன்முறை. ஊடகத் துறையில் நெடுங்காலமாகப் பணியாற்றிவரும் ராஜா வாசுதேவன் இந்த முக்கியமான பணியைச் செய்திருக்கிறார்.

புத்தகங்களிலிருந்து கிடைத்த தகவல்களோடு மட்டுமல்லாமல் அஞ்சலை அம்மாளின் வாரிசுகளோடு உரையாடியும் பல விஷயங்கள் திரட்டப்பட்டிருப்பதன் வழியாக அவருடைய வாழ்க்கையின் முழுமையான சித்திரம் இந்தப் புத்தகம் வழியாகக் கிடைக்கிறது. சில கற்பனைப் பாத்திரங்களையும் இந்தப் புத்தகத்தில் உலவவிட்டு, ஒரு நாவல்போல எழுதியிருப்பது புத்தகத்துக்குக் கூடுதல் சுவாரஸ்யம் தருகிறது.

– கதிரவன்

Weight0.6 kg