அறிவியல் மேலைநாட்டில் தோன்றியதா? | சி.கே. ராசு

70

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

அறிவியல் வரலாற்றை தமிழில் அறிந்துகொள்ள உதவும் முக்கியமான புத்தகம். மேற்கத்திய வரலாற்றின்படி அறிவியல் கிரேக்கர்களிடம் தோன்றியது, பிறகு மறுமலர்ச்சி காலத்தில் ஐரோப்பாவில் வளர்ந்தது. இந்தக் கதை மூன்று நிலைகளில் எவ்வாறு இட்டுக் கட்டப்பட்டது என்பதை இந்நூல் விவரிக்கிறது: முதலாவதாக, சிலுவைப் போர்களின் போது, கைப்பற்றப்பட்ட அரபுப் புத்தகங்களில் உலக முழுவதிலிருந்தும் பெறப்பட்ட அறிவியல் அறிவு இடம்பெற்றிருந்தன; அவை அனைத்தும் கிரேக்கர்களிடமிருந்து வந்ததாகக் கூறப்பட்டு, கிறித்துவ இறையியல் அடிப்படையில் சரியான ஒரு தோற்றமும் கொடுக்கப்பட்டது. இந்தச் செயல்முறை யூக்லிட் (வடிவக்கணிதம்), கிளாடியஸ் டாலமி (வானியல்) ஆகியோரின் முக்கிய நிகழ்வுகளைப் பயன்படுத்தி, அவர்கள் இருவருமே ‘இட்டுக்கட்டப்பட்ட உருவங்கள்’ என்றுக் கூறுகிறது இந்த நூல்.

இரண்டாவதாக, கிறித்துவ மதக் குற்ற விசாரணை காலத்தின் போது உலக அறிவியல் அறிவுக்கு மீண்டும் கிறித்துவ இறையியல் அடிப்படையில் ஒரு சரியான தோற்றம் கொடுக்கப்பட்டது; இதற்காக அது மற்றவர்களிடமிருந்து பரப்பப்படவில்லை, ஐரோப்பியர்களால் ‘சுயேச்சையாக மறுகண்டுபிடிப்புச் செய்யப்பட்டது’ என வலியுறுத்தப்பட்டது. கோபர்னிக்கஸ், நியூட்டன் (நுண்கணிதம்) ஆகியோரின் நிகழ்வுகள் ‘மறுகண்டுபிடிப்புவழி புரட்சி’ என்னும் செயல்முறை என இந்த நூலில் விவரிக்கப்படுகிறது. மூன்றாவதாக, இவ்வாறு மற்றவர்களிடமிருந்து ‘சுடப்பட்ட’ அறிவுக்கு மறுவிளக்கமளித்து, சிலுவைப் போருக்குப் பிந்தைய கிறித்துவ இறையியலுக்கு ஒழுங்கமைவுச் செய்யப்பட்டது. இதைக் காலனியாதிக்க அறிஞர்கள் மட்டுமின்றி, இனவெறிபிடித்த வரலாற்று அறிஞர்களும் சுரண்டிக்கொண்டு, அறிவியல் அறிவின் (வடிவக்கணிதம், நுண்கணிதம் போன்ற) ‘சரியான’ வடிவம் மேலை நாடுகளில் மட்டுமே காணப்பட்டது என்று வாதாடுகின்றனர். இந்தச் ‘சுடும்’ செயல்முறை இன்றும் தொடர்கின்றது.

Weight0.25 kg