பிராமண போஜனமும் சட்டிச் சோறும் (இடைக்காலத் தமிழகத்தில் வைதீகமும் சாதி உருவாக்கமும்)

100

Out of stock

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

தமிழ்நாட்டின் வரலாற்று வரைவுக்கு உறுதுணையாக அமையும் கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே தோன்றிவிட்டன. பிற்காலச் சோழர் ஆட்சிக்காலத்தில் இவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பர். அரசியல் வரலாற்றை மட்டுமின்றி, சமூக, பொருளியல் பண்பாட்டு வரலாறு தொடர்பான கணக்கற்ற செய்திகளையும் கொண்டுள்ளன. கல்வெட்டுகளில் இருந்து இச்செய்திகளைக் கண்டறியும் போதுதான் மன்னர்களின் ஆளுகையில் தமிழகத்தில் நிலைகொண்டிருந்த சமூக அமைப்பு குறித்த தெளிவான பதிவுகளை உணரமுடியும்.

மன்னர்களின் பரம்பரைப் பட்டியல், அவர்கள் நிகழ்த்திய போர்கள், கட்டுவித்த கோவில்கள், அவர்களது பட்டத்தரசியர், அறச்செயல்கள் என்பனவற்றைக் கடந்து வேறுபல செய்திகளையும் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.

“வேறு பல செய்திகள்” சமூக உறவுகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்பல்லவர் காலத்தில் பரவத் தொடங்கிய வைதீகம் இடைக்காலத் தமிழகத்தில் ஆழமாக வேர்விட்டு, சோழர் காலத்திலும் விஜயநகரப் பேரரசு காலத்திலும் தழைத்து வளர்ந்தது. புதிய சாதிகளின் உருவாக்கமும் சாதிகளுக்கு இடையிலான முரணும் இவ்விரு பேரரசுகளின் காலத்தில் முக்கிய சமூக நிகழ்வுகள் ஆயின. இந்நிகழ்வுகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இக்காலத்தில் தோன்றிய கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளன.

பிராமண போஜனமும் சட்டிச் சோறும் /

Category : Essay
Author : A. Sivasubramanian
ISBN : 9788123436500
Weight : 100.00gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2018
Code no : A3805
Page : 76

Weight0.25 kg