Description
புத்தரைப் போல எதிரிகள், சீடர்கள் இருசாரராலும் ஒருங்கே பிரித்துக் கூறப்படுகிறவர் வேறு யாரும் இல்லை. வேத மதத்தை எதிர்த்துப் புறப்பட்டவரை ஒரு வேதவாதி என்று சித்தரிக்கிறார்கள். கடவுளே இல்லை என்றவரை ஒரு கடவுளாக்கி வழிபடுகிறார்கள். புத்தர் எனும் சந்திரனை மறைக்கும் கருமேகங்களை விலக்கி அவரின் மெய்யான முகத்தை காட்டுகிறது. புத்தருக்கு முன் புத்தர் புத்தருக்கு பின் என்று முக்காலத்திலும் இது பயணிக்கிறது.