Description
இராபர்ட் கால்டுவெல் 1814 முதல் 1891 வரை வாழ்ந்தவர், அயர்லாந்தில் பிறந்து, இந்தியாவில் சமயப் பணியில் ஈடுபட்டு, தென்னிந்திய மொழிகளை ஆய்வு செய்து, “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற நூலை எழுதியவர். இவர், திராவிட மொழியியலின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
ஆரியர் மேலாதிக்கத்துக்கு எதிரானத் திராவிட அரசியல் என்னும் விழிப்புணர்வு ஏற்பட கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூலே தூண்டுகோலாக அமைந்தது. அதுவே அவரைத் தமிழ்நாட்டார் போற்றுவதற்கும் ஆளுநர் ரவி போன்றோர் தூற்றுவதற்கும் காரணம் ஆகியது.
சனாதனத்தில் நம்பிக்கை கொண்டோர் மட்டுமின்றித் தமிழ்த் தேசிய அரசியல் பேசும் சிலரும் திராவிடம் என்ற கருத்தியலை விமர்சிக்கிறோம் என்ற பெயரில் கால்டுவெல் அவர்களது பணிகளைச் சிறுமைப்படுத்துகின்றனர். இந்தச் சூழலில் கால்டுவெல் குறித்த சரியான அறிமுகம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குச் செய்யப்பட வேண்டும் என உணர்ந்தே இந்தச் சிறுநூலை வெளியிடுகிறோம்.