கேப்டன் விஜயகாந்த் விரிவான வாழ்க்கை வரலாறு – பா. தீனதயாளன்

555

தொழிலதிபர், நடிகர், அரசியல்வாதி என பன்முகங்களைக் கொண்டு தமிழகத்தில் மிகப் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கிய விஜயகாந்தின் முழு வாழ்க்கை வரலாற்று நூல்.

Add to Wishlist
Add to Wishlist

Description

தொழிலதிபர், நடிகர், அரசியல்வாதி என பன்முகங்களைக் கொண்டு தமிழகத்தில் மிகப் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கிய விஜயகாந்தின் முழு வாழ்க்கை வரலாற்று நூல்.

விஜயராஜாக இருந்த காலம் தொட்டே இயல்பாகவே அவரிடம் யார் தவறு செய்தாலும் அதைத் தட்டிக் கேட்க வேண்டும் என்ற சுபாவம் பண பலமும், அரசியல் செல்வாக்கும், வானளாவிய அதிகாரமும் உள்ளவர்களை எதிர்த்துக் கேள்வி கேட்கவும் எப்போதும் உழைக்கும் வர்க்கத்துக்கு ஆதரவாக அவர்கள் பக்கம் நிற்கவும் வைத்தது. அதுவே விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்துக்கு காரணம் ஆனது. அதனால்தான் விஜயகாந்தால் சித்தாந்த, தத்துவார்த்த குழப்பங்கள் எதுவும் இல்லாமல், பிம்ப அரசியலில் சிக்காமல் கடைசி வரை வெகுஜனத்துடன் நெருக்கமாக இருக்க முடிந்தது.

அரசியல் சதுரங்க ஆட்டத்தில் அவருடன் கூட இருந்து கொண்டே அவருக்கு குழியையும் பறித்துக் கொண்டிருந்தவர்கள், அவரை முன்னால் விட்டு பின்னால் சென்று சத்தமில்லாமல் முதுகில் கத்தியைச் செருகியவர்கள் கூட்டம் மிகவும் பெரியது.

விஜயகாந்தின் வாழ்க்கைப் பாதை ரோஜாக்கள் நிறைந்ததாக எப்போதுமே இருந்ததில்லை. முட்களும் கற்களும் நிறைந்த பாதை.

உண்மையாக உழைத்தால், தீவிரமாக முயற்சித்தால், இலட்சிய வேட்கையுடன் செயல்பட்டால், நேர்மையான பாதையில் பயணித்தால் யார் ஒருவரும் உச்சம் தொடலாம் என்பதை உலகுக்கு உரத்துச் சொல்கிறது விஜயகாந்தின் வாழ்க்கைப் பதிவான கேப்டன் விஜயகாந்த் என்ற இந்த நூல்.

Additional information

Weight0.5 kg