இஸ்லாம் மார்க்கம் வடக்கு ‘சிந்து’ வில் நுழையும் போது வாள் முனையைச் சந்திக்க நேர்ந்து! ஆதலால் வாளால் பதில் சொல்ல வேண்டி வந்தது!
தெற்கே “கேரளா”வுக்கு இஸ்லாம் வரும் போது வர்த்தக வழியில் வரவேற்கப்பட்டது. ஆதலால் அன்புக்கு ஆட்பட்டு மனிதப் பண்பை வளர்த்தது!
மாமேதை மூன்றவது சேரமான் பெருமாள் காலத்தில் அந்த அற்புதம் நடந்தது! இஸ்லாம் என்றால் என்ன? என்ற உண்மை கேரள மண்ணில் புரிய வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழகமும் புதுமை கண்டது.
இஸ்லாத்தின் இந்த இனிய வரலாறு அரசு முரடாய்ச் சொல்லப்படாமல் கதை வடிவில், வரலாற்று நவீனமாகத் தரப்பட்டுள்ளது.
இந்தியாவில் எந்த மொழியிலும் இதுவரை எழுதப்பட்டிராத ஒப்பற்றதொரு காவியம்! பெண்களும் சிறுவர்களும் கூடப் படிக்கத் தக்க எளிய தமிழ் நடை! ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்க வேண்டிய இலக்கியப் பொக்கிஷம்!