Description
தமிழகத்தில் திரைப்படம் வெறும் காட்சி பொருளாக மட்டுமே தன்னை சுருக்கி கொள்ளாமல் சமூக சிந்தனை எனும் பதாகையை தாங்கிய சாதனமாக உலா வந்திருக்கிறது. பராசக்திக்கும் பரியேறும் பெருமாளுக்கும் இடைப்பட்ட காலத்தில் சண்டியர்தன சாதிய வன்ம திரைப்படங்கள் எல்லாம் காட்சிப்படுத்தப்பட்டாலும் அசுரன் தனத்துடன் அவை எல்லாமே நவீன அடித்தள மக்கள் பார்வை சினிமாவால் பொடி பொடியாக்கப்பட்டது.





























