இந்த நூல் காலனிய மருத்துவ வரலாற்றைத் தமிழில் முன்னெடுத்துள்ள ஒரு முதன்மையான நூல், அரசியல் வரலாறு, சமூக வரலாறு, பண்பாட்டு வரலாறு, பொருளாதார வரலாறு முதலானவற்றை அறிந்து கொண்டுள்ள அளவிற்கு நாம் காலனிய காலத்தின் மருத்துவ வரலாற்றை அறிந்ததில்லை. அதிலும் தமிழில் அறியும் வாய்ப்பு கிடைக்கவில்லை . உதிரிக் கட்டுரைகளாக சில பொழுது எழுதப் பெற்றுள்ளன. வெவ்வேறு பொருள் சார்ந்து சில நூல்கள் உள்ளன. நேர்ப் பொருளில் ஒரு முழுமை நோக்கிய (holistic) பார்வையில் முழு நீள நூல் இதுவரை இல்லை. அந்த வெற்றிடத்தை இந்த நூல் நீக்குகிறது. அதனால் இந்த வகைமையில் முதல் நூல் எனும் சிறப்பைப் பெறுகிறது.
நமது சூழலில் மருத்துவக் காலனியம் பற்றிய அனைத்துப் புள்ளிகளையும் இணைத்துப் பேசும் முதன்மையான நூலாக இது விளங்குகிறது.
– முனைவர் பக்தவத்சல பாரதி,
இயக்குநர்,
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி
நிறுவனம்,
புதுச்சேரி.