தேவிகாபுரம் – கோயிற்கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை

1,000

திருக்கோயில்களின் கட்டட அமைப்பைப் பற்றியும், நுணுக்கமான சிற்பக் கலைப் படைப்புகளைப் பற்றியும் முழுமையாகப் பதிவுசெய்த ஓர் அரிய ஆவணமாக இந்நூல் வெளிவருகிறது. இக்கோயில்களின் கருவறை முதல் வானுயர்ந்த இராஜகோபுரம் வரை அமைந்துள்ள, 4000-க்கும் மேற்பட்ட சிற்பங்களை ஆவணப்படுத்தும் பெரும் முயற்சியாக இது அமைந்துள்ளது.

Add to Wishlist
Add to Wishlist

Description

தமிழகக் கலை வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் கோபுரக் கலையின் விரிவையும் ஆழத்தையும் முழுமையாகப் படித்துணர வேண்டியது அவசியம். அதிலும் குறிப்பாக, விஜயநகரப் பேரரசுக் காலக் கட்டிடக்கலைச் சிறப்பினை அறிந்துகொள்ள, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில் உள்ள தேவிகாபுரம் திருக்கோயில்கள் மிகச் சிறந்த சான்றுகளாகத் திகழ்கின்றன.

இந்தத் திருக்கோயில்களின் கட்டட அமைப்பைப் பற்றியும், நுணுக்கமான சிற்பக் கலைப் படைப்புகளைப் பற்றியும் முழுமையாகப் பதிவுசெய்த ஓர் அரிய ஆவணமாக இந்நூல் வெளிவருகிறது. இக்கோயில்களின் கருவறை முதல் வானுயர்ந்த இராஜகோபுரம் வரை அமைந்துள்ள, 4000-க்கும் மேற்பட்ட சிற்பங்களை ஆவணப்படுத்தும் பெரும் முயற்சியாக இது அமைந்துள்ளது.

கலை வரலாற்று ஆர்வலர்களுக்காக, சிற்பங்களையும் கட்டடக் கூறுகளையும் விவரிக்கையில், நல்ல தமிழ்ச் சொற்களைப் புகுத்திப் புதுமை கண்ட புத்தகமாகவும் இது ஒளிர்கிறது.

தமிழகக் கோயில் கலை வரலாற்றின் களஞ்சியமாக விளங்கும் இந்நூல், எதிர்கால ஆய்வாளர்களுக்கு ஓர் முன்னோடி முயற்சியாகவும், அடிப்படைக் கையேடாகவும் விளங்கும் என்பதில் ஐயமில்லை.