பொருளடக்கம்
- அணிந்துரை
- முன்னுரை
- சமண சமயம் – ஜைனசமயம்
- எண்பெருங்குன்றம் – சமணர்களின் புனிதக் குன்றங்கள்
- சமணமலை – திருவுருவகம் மாதேவிப்பெரும்பள்ளி
- முத்துப்பட்டி பெருமாள்மலைச் சமணப்பள்ளி
- கொங்கர்ப்புளியங்குளம் மலைப்பள்ளி
- திருப்பரங்குன்றம் சமணப்பள்ளி
- குறண்டி பராந்தகபர்வதம் திருக்காட்டாம்பள்ளி
- யானைமலைச் சமணப்பள்ளி
- அரிட்டாபட்டி திருப்புணையன் மலைப்பள்ளி
- அழகர்மலைப்பள்ளி
- கீழவளவு மலைப்பள்ளி
- கருங்காலக்குடி மலைப்பள்ளி
- புத்தூர் மலைப்பள்ளி
- குப்பல்நத்தம் பொய்கைமலைப்பள்ளி
- படங்கள்
வைதீக சமயங்களுக்கு எதிராக இந்தியாவில் தோன்றிய பழைமையான இரு முக்கியச் சமயங்கள் சமணமும் பௌத்தமும் ஆகும். பௌத்த சமயம் அது தோன்றிய பூமியில் வேர்விட்டுப் பரவாமல் அண்டை நாடுகளில் எல்லாம் அரசோச்சி, இன்றும் அங்கு செல்வாக்குடன் இருந்து வருகிறது. சமண சமயமோ பாரத பூமியின் அனைத்துப் பகுதிகளிலும் பரவிப் பன்னெடுங்காலமாகப் புகழுடன் இருந்து வருகிறது. இன்றும் இந்தியாவில் சமண சமயம் பல பிரிவினரிடத்தில் செல்வாக்குடன் பின்பற்றப்பட்டு வருவது இச்சமய மரபிற்கு இந்தியாவில் கிடைத்த வெற்றியைக் காட்டுகிறது. ஆதிநாதர் முதல் மகாவீரர் ஈறாக இருபத்துநான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றி இச்சமயத்தினை வளர்த்ததாக சமண சமயத்தவர்கள் கருதுகின்றனர். இவர்களில் பார்சுவநாதரையும் (கி.மு. 817-717), மகாவீரரையும் (கி.மு. 599 -527) வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.
அனைத்துப் பிரிவினரையும் கவர்ந்த மகாவீரர் உலகவாழ்வு நீங்கி முழுதுணர் ஞான நிலையை அடையத் துறவு வாழ்வைப் பெரிதும் வலியுறுத்தினார். சமணர்கள் பிற உயிர்களுக்குத் தீங்கிழைத்தலைத் தவிர்த்தனர். புலால் உண்ணுதலை வெறுத்தனர். பிற சமயத்தவர்கள் இவர்களிடமிருந்தே புலால் உண்ணாமைக் கொள்கையைக் கடைபிடித் திருக்க வேண்டும். இவ்வுலக வாழ்விலிருந்து விடுபடவும் அகிம்சை அறத்தைப் பின் பற்றி ஊர்களுக்கு வெளியே ஒதுக்குப்புறமாக இருந்த மலைகளில் அமைந்திருந்த இயற்கையான குகைத்தளங்களில் சமணத் துறவிகள் வாழ்ந்தனர். இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று ஆங்காங்கே இருந்த குன்றுகளில் கல்விச்சாலைகள் அமைத்து பல மாணவர்களை உருவாக்கினர். மழைக்காலங்களில் குன்றுகளில் தங்கி கோடை காலங்களில் ஊர்ப்பகுதிகளுக்குச் சென்று அறமுரைத்தனர்.
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் பௌத்த சமயத்தைப் பரப்ப தம் அதிகாரி களைத் தெற்குநோக்கி அனுப்பிய காலத்திற்கு முன்பாகவே சமணம் தென்னாட்டிற்கு வந்துவிட்டது என்று கருதுகின்றனர். உஜ்ஜையினியில் இருந்த அசோகனது பேரனான சம்பிரதி என்பவன் சமண முனிவர்களுக்கு ஆதரவளித்து, தென்னாட்டிலும் சமணம் வளர்வதற்குத் துணைபுரிந்துள்ளான். தமிழ்நாட்டின் தென்பகுதியான பாண்டி நாட்டில் சமண முனிவர்கள் பல குன்றுகளில் இருந்த இயற்கையான குகைத்தளங்களையே முதன்முதலில் தங்களது இருப்பிடங்களாகத் தேர்ந்தெடுத்தனர். சமணர்களின் இருக்கை களும் கல்வெட்டுகளும் தீர்த்தங்கரர் உருவங்களும் பாண்டிய நாட்டின் மூலை முடுக்கு களிலெல்லாம் கிடைத்திருக்கின்றன. இது இந்நாட்டில் அச்சமயம் கொண்டிருந்த செல்வாக்கை உணர்த்துகிறது.
சைவ, வைணவத் தலங்கள் என இலக்கியங்களில் சிறப்பாகக் கூறப்பட்டிருக்கும் திருப்பரங்குன்றம், அழகர்மலை போன்ற இடங்களிலெல்லாம் சமண சமயம் அச்சமயங் மதுரை நகரைச் சுற்றி சமணமலை, நாகமலை, பெருமாள்மலை, கொங்கர்புளியங்குளம் ஆனைமலை, இருப்பாள், சிற்பங்கள். கல்வெட்டுகள் காணப் படுகின்றன. சிறிதுகாலம். துறவிகளின் இருத்தைகள் என்பது உண்மையாயிருப்பினும் தரும். . ஆம் நாநூற்றாண்று சமயப் பளலகள்ள் சமணத் துறவிகளை ஆதரித்தனர் என்பதற்குச் சமணமலை உச்சியில் உள்ள கல்வெட்டும், உத்தமபாளையம் மலையில் உள்ள கல்வெட்டும் இன்னபிறவும். சான்று பகர்கின்றன. அவர்களது வளர்ச்சி கி.பி. 12ஆம் நூற்றாண்டு வரை தடையின்றித் சென்றது. சமணத் துறவிகள் சமணத் தொண்டையும் தமிழ் இலக்கியத் தொண்டையும் இணைந்து செய்தனர். இதன் காரணாக பல சமணப் பள்ளிகள் தோன்றின. அவை பல இடங்களில் செல்வாக்குடன் விளங்கி வந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாக சமணமலைப் பள்ளி இருந்துள்ளது. இப்பள்ளி சிரவணபெளகொளாவிலிருந்த துறவி களுடன் தொடர்பு கொண்டிருந்தது.
பாண்டிய நாட்டில் சமணம் என்னும் மிகப்பரந்த ஆராய்ச்சியில் தன்னைப் பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் தொல்லியல் அறிஞர் முனைவர் வெ.வேதாசலம் அவர்கள் ‘எண்பெருங்குன்றம்’ என்னும் இந்நூலை அறிஞர்தம் பார்வைக்குச் சமர்ப் பித்துள்ளார். இந்நூல் சமணரின் புனிதத் தலங்களாக விளங்கிய எண்பெருங்குள் றங்கள் எவை எவை என்பதை அடையாளம் காட்டுகின்றது. முதன்மைச் சான்றுகளின் அடிப்படையிலும் ஒப்பீட்டு முறையிலும் இக்குன்றங்கள் அடையாளம் காணப்படு கின்றன. இன்று அழிந்து போயுள்ள குறண்டிப் பள்ளியின் வரலாற்றை, ஆசிரியர், பள்ளிமடம், கழுகுமலை, உத்தமபாளையம், சமணமலை போன்ற இடங்களிலுள்ள கல்வெட்டுச் செய்திகள் மூலம் வெளிக்கொணர்ந்துள்ளார். வைணவர்கள் கோயில் என்றாலே திருவரங்கம் என்பதுபோல் சமணர்கள் பள்ளி என்றாலே குறண்டித் திருக்காட் டாம்பள்ளி என்று கருதும் சிறப்புப்பெற்ற இத்தலத்தின் வரலாறு இந்நூலாசிரியரின் ஆய்வின் வெளிப்பாடாகும்.
இந்நூல் திருவுருவகம் என்று பெயர் பெற்று சமணமலையில் செயல்பட்ட மாதேவிப்பெரும்பள்ளி பற்றிய புதிய வரலாற்றுச் செய்திகளைக் கொண்டுள்ளது. இங்குள்ள கல்வெட்டுகளைப் பலர் ஆராய்ந்தறிந்திருந்தபோதும் இந்நூலாசிரியர் அவற்றை மீளாய்வு செய்து முன்னர் விடப்பட்ட, தவறாக வாசிக்கப்பட்டவற்றை நேர்கண்டு சரியாக வாசித்தறிந்து இவ்வரலாற்றைப் படைத்திருப்பது சமணசமய வரலாறு மற்றும் கலை பற்றி பின்னாளில் ஆய்வு செய்வோருக்குப் பெருங்கொடையாக அமைந்திருக்கின்றது என்பது மிகவும் பாராட்டத்தக்க ஒன்றாகும். மேலும், மதுரையைச் சுற்றியுள்ள பல சமணக்குன்றங்களின் வரலாற்றை ஆய்வு செய்து அவற்றிலுள்ள தமிழ் பிராமிக் கல்வெட்டுகளோடு சமணச் சிற்பங்கள், வட்டெழுத்துக் கல்வெட்டுகளையும்
ஆய்வு செய்து இந்நூல் உருவாக்கப்பெற்றுள்ளது. இந்நூலில் ஆசிரியர் தாம் வாசித்த கல்வெட்டுகளின் மூலத்தையும் கொடுத்துள்ளார். இங்கு அவர் கொடுத்துள்ள வரை படங்கள் சமணக் குகைத்தளங்களைக் காண விழைவோருக்குப் பேருதவியாய் அமையும். புகைப்படங்கள் எப்படி எடுக்கப்பட வேண்டும் ? நூலின் கருத்துகளோடு எவ்வாறு புகைப்படங்கள் இணைந்து செல்வதுபோல் அமைக்கப்பட வேண்டும் என்ற அவரின் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இச்சிறந்த நூலைத்தந்த ஆசிரியரின் நற்பணியைப் போற்றி வாழ்த்துகின்றேன்.
– கு.சேதுராமன்
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் தோன்றிய தொன்மையான சமயம் சமணச் சமயம் ஆகும். வடநாட்டில் எழுந்த இச்சமயம் தமிழ்நாட்டிற்கு கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பாக வந்துவிட்டது. தமிழர் வாழ்வில் ஆழமாகக் நிற்கிறது. இச்சமயம் தமிழ்மொழி, கலந்து இன்றும் வாளச்சிக்கும் தமிழ் மக்களின் நாபோப் யண்பாட்டு வளர்சிக்கும். தெரும் பங்காற்றியுள்ளது. தமிழகத்தில் அறத்தைப் போற்றிய பாண்டியரின் தலைநீர் மான மதுரை மாநகரிலும் அதனைச் சூழ்ந்த குன்றங்களிலும் இது முதன்முதலில் காலுான றியது. தென்னிந்தியாவில் சமணம் தொடர்பான மிகப்பழமையான கல்வெட்டுச் சான்று கள், பிற தொல்லியல் சான்றுகள் மற்றும் இலக்கியச் சான்றுகள் மதுரைப் பகுதியில்தான் அதிக அளவில் கிடைக்கின்றன. இதனால்தான் பாண்டியநாடும் மதுரைப் பெருநகரும் தமிழ்நாட்டின் சமண சமயத்தவரின் தாயகமாக விளங்கின என்று தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்களும், ஜீவபந்து டி.எஸ் . ஸ்ரீபால் போன்ற சமணச் சான்றோர்களும் கருது கின்றனர்.
தமிழ்நாட்டிலுள்ள முக்கிய நகரங்களைச் சுற்றிலும் பெருவழிகளிலும் அமைந்த சிறிய குன்றங்களே வரலாற்றின் தொடக்ககாலத்திலும் இடைக்காலத்திலும் சமணர்களின் சமய மையங்களாக இருந்தன. இத்தகு குன்றங்கள் மதுரையைச் சுற்றிப் பதினேழு இடங்களில் உள்ளன. இவற்றுள்ளும் ‘எண்பெருங்குன்றம்’ என்று அழைக்கப்பட்ட எட்டுக் குன்றங்கள், முதன்மைவாய்ந்த தலையாய சிறப்புப் பெற்றவையாய் இடைக் காலச் சமண சமய வரலாற்றில் இருந்துள்ளன. இவற்றைத் தமது பிறப்பை அறுக்கும் புனிதப் பெருங்குன்றங்களாகச் சமணர்கள் கருதினர். பிறவிப் பெருங்கடலைக் கடக்க உதவும் புணை (தெப்பம்) என்று இவற்றிற்குப் பெயரும் இட்டனர். இக்குன்றங்கள் பலவற்றில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் கி.பி. எட்டு, ஒன்பது, பத்தாம் நூற்றாண்டுகளைச் சார்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு களும் அக்காலத்தினைச் சார்ந்த கலைச்சிறப்பு வாய்ந்த தீர்த்தங்கரர் சிற்பங்களும் காணப் படுகின்றன. சமண சமய வரலாற்றோடு சமணக்கலை வரலாற்றினையும் பாண்டிய நாட்டு அரசியல் வரலாற்றையும் தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சியினையும் அறிந்து கொள்வதற்கு அரிய சான்றுகள் இக்குன்றங்களில் பொதிந்து கிடக்கின்றன. சமணர்களின் உறைவிடமாகவும் வழிபாட்டுத் தலமாகவும் கல்விக்கூடமாகவும் நாடிவந்தோரின் உள்ளப்பிணி, உடற்பிணி ஆகியவற்றை ஒருங்கே போக்கும் புனிதத் தலங்களாகவும் இவை அமைந்திருந்தன. இவற்றைக் கோவேந்தன் முதல் குடிமகன் வரை ஆதரவளித்துப் போற்றிக் காத்துள்ளனர். இதுபோன்று பல கருத்துகளை இந்நூல் எடுத்துக்கூறுகிறது. மேலும், எண்பெருங்குன்றம் எவை என்பதையும் அவற்றின் வரலாற்றையும் கால முறைப்படி தொல்லியல் சான்றுகளோடு ஆராய்கிறது.
இந்நூல் மதுரையைச் சுற்றியுள்ள பன்னிரண்டு சமணக் குன்றங்களில் இருந்த சமணப் பள்ளிகளின் வரலாற்றை விரிவாக எடுத்துக்கூறுகிறது. சமணமலைகள் பற்றிய இவ்வாய்வு எண்பெருங்குன்றங்களின் தன்மையை அறிந்து கொள்வதற்கும் சமண சமயத்தின் காலவாரியான போக்கினையும் மாற்றங்களையும் புரிந்துகொள்வதற்கும் உதவுகிறது. இவற்றிற்குரிய அரிய சான்றுகளைத் தன்னகத்தே கொண்ட கருவூலமாக சமண மலைகள் விளங்குகின்றன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பதின் மூன்றாம் நூற்றாண்டு வரை நீண்ட வரலாற்றை இவை கொண்டுள்ளன. சமணர்களின் உறைவிடமாக மட்டுமல்லாமல் வழிபாட்டுத் தலமாகவும் சமணச் சான்றோர்கள். ஆசிரியர்கள், மாணவர்கள் நிறைந்த சமணசமயக் கல்லூரியாகவும் இத்தலங்கள் திகழ்ந் துள்ளன. தென்னிந்தியாவில் புகழ்பெற்று விளங்கும் சிரவணபெளகொளாவோடு இப் பள்ளிகள் தொடர்புகொண்டிருந்தன. அங்கிருந்து வந்த சமண முனிவர்களின் செயல் பற்றித் தெரிவிக்கும் கன்னடக் கல்வெட்டு ஒன்று திருவுருவம் என்றழைக்கப்பட்ட கீழக்குயில்குடிச் சமணமலையில் உள்ளது அதன் பெருமையைப் பறைசாற்றுகிறது. தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மதுரையைச் சுற்றியுள்ள இக்குன்றங்களுக்கு மக்கள் வந்து பல அறச்செயல்களைச் செய்துள்ளதை அங்குள்ள தமிழ்பிராமி. வட்டெழுத்துக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பலமுறை கள ஆய்வு செய்து அக்கல்வெட்டுகள் திருத்த முற மீண்டும் படிக்கப்பெற்று அதிக அளவில் புகைப்படங்களுடன் புதிய செய்திகளோடு இந்நூல் வெளிவருகிறது. ஒவ்வொரு குன்றத்திற்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட முறை நேரில் சென்று ஆய்வு செய்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நூலாக்கத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த பலருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் உள்ள குன்றங்களுக்கு மீளாய்வு செய்ய என்போன்றோரை அழைத்துச் சென்று அங்குள்ள தமிழ்பிராமிக் கல்வெட்டுகளைப் படிக்க வழிகாட்டி அவற்றிற்குத் திருந்திய நல்ல வாசிப் பினைக் கிடைக்கச் செய்தவர் தமிழ்பிராமிக் கல்வெட்டு ஆசான் ஐராவதம் மகாதேவன் ஆவார். மேலும், இந்நூல் செழுமைபெற கல்வெட்டுகள் தொடர்பான அரிய கருத்து களைக் கலந்துரையாடல் மூலம் வழங்கியதோடு இந்நூலாக்கத்திற்குத் துணைபுரிந்தவர் பேராசிரியர் முனைவர் எ. சுப்பராயலு ஆவார்கள். இந்நூலுக்குத் தக்க அணிந்துரை அளித்துப் பெருமைப்படுத்தியவர் அருமை நண்பர், மதுரை காமராசர் பல்கலைக்கழக கலை வரலாற்றுத்துறை மேனாள் பேராசிரியர் முனைவர் கு. சேதுராமன் ஆவார். இவர் கள ஆய்வின்போது பலமுறை என்னுடன் வந்து பெருந்துணை புரிந்தவர். பேராசிரியர் திருமதி அ. கலாவதி அவர்கள் இந்நூலின் அச்சுப்படிகளைத் திருத்தம் செய்து உதவினார்.
இந்நூல் வெளிவருவதற்கும் அச்சேறுவதற்கும் அருந்துணை புரிந்தவர் பலராவர் . அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மதுரைத் தமிழ்ச்சமணச் சங்கத்தினர். இவர்களில் வந்தவாசி அறச்செல்வர் சொ. அனந்தராஜ், முனைவர் கனக அஜீததாஸ், இந்திய அரசுத் தொல்லியல்துறை, தொல்லியல் ஆய்வாளர் நா. வீரராகவன் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர் ஆவர்.
இந்நூல் சிறப்பாக வெளிவர துணைபுரிந்த தஞ்சை நாணயவியல் செம்மல் அளக்குடி ஆறுமுக சீதாராமன், தஞ்சாவூர், முல்லைபாரதி கம்ப்யூட்டர் பிரிண்டர்ஸ் வை இராமமூர்த்தி, சென்னை, ஜப்பானிகா பிரிண்டர்ஸ் ஆகியோர்க்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
கீழக்குயில்குடிச் சமணமலையின் பெருமையை சமணசமய உலகத்திற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எடுத்துக்கூறி நூல் வாயிலாக அறிமுகம் செய்தவர் ஜீவபந்து டி.எஸ். ஸ்ரீபால் ஆவார். அவரே சமணமலையில் கல்லுடைப்பைத் தடுத்து நிறுத்தியவர். அரசுக்கு அறிவுறுத்தி மத்திய அரசுத் தொல்லியல் துறையின் வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கச் செய்து அக்குன்றத்தைக் காத்த பெருந்தகையாளர். சமணமலை போன்ற குன்றங்களை, “அறநெறி பிழையாது அன்பும் அடக்கமும் அருள்செறிந்த உள்ளமும் உடையவர்களாய் இலக்கியங்களும் இலக்கணங்களும் நீதிநூற்களும் படைத்தருளிய அறவோர் பள்ளிகள்” என்று அவர் கருதியது இவ்வேளையில் எண்ணத்தக்கது.
பாண்டிய நாட்டில் எண்பதிற்கும் மேற்பட்ட இடங்களில் சமணப் பள்ளிகள் இருந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அழிந்துபோயின. அவ்விடங்களில் இன்று சிதைந்துபோன கல்வெட்டுகளும் வழிபாடற்ற நிலையில் கிடக்கும் தீர்த்தங்கரர்ச் சிற்பங் களும் கல்வெட்டுகளும் முனியாண்டியாய் மாறிப்போன தீர்த்தங்கரர் உருவங்களும் எஞ்சியுள்ளன. பாண்டிய நாட்டில் பெருஞ்செல்வாக்குடன் இருந்து அழிந்துபோன இத்தலங்களைப் பற்றிய விரிவான நூல் ஒன்றும் இந்நூலாசிரியரால் எழுதப்பட்டு வெளி வருகிறது. அதற்கு முன்னுரையாக உள்ள இந்நூல் மதுரையைச் சுற்றியுள்ள சமணரின் புனிதக் குன்றங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து வெளியிடப்படுகிறது. அழிந்தும் மறந்தும்போன வரலாற்று உண்மைகளைத் தேடித் தமிழ் வரலாற்று உலகிற்கு அளிக்க வேண்டியது ஒரு நேர்மையான தொல்லியல் ஆய்வாளரின் கடமை என்ற உணர்வோடு எழுதப்பட்டது இந்நூல். அறிஞர் உலகமும் பிறரும் இதனை ஏற்றுப் போற்றுவர் என எண்ணுகிறேன்