எதிர்காலத்தில் சாதிகள்- ப.செ.ராஜ்

440

ஜனநாயக இந்தியாவில் சாதிப் பாகுபாடுகளும், சாதிய வன்முறையும் ஓயவில்லை. மத நம்பிக்கைக்கும் சாதி முறைக்கும் உள்ள தொடர்புதான் இதற்கு காரணமா? சாதி – மதத் தொடர்பு உண்மையானதா? கற்பனையானதா? சமூக நீதி எல்லா குடிமக்களுக்கும் எப்போது கிடைக்கும்?’ என்பன போன்ற பல்வேறு கேள்விகளை அலசி ஆராய்வதோடு மட்டுமல்லாது அதற்கான விடையையும் தேட முற்பட்டிருக்கிறது இந்நூல். இந்தியச் சமூகம் சாதிகளால் பிளவுபட்டுள்ளது. மனிதாபிமானம் என்பதை மனதில் நிலைநிறுத்தி தீமையான சாதிய பாகுபாட்டை கைவிட இந்நூலாசிரியரால் தொகுக்கப்பட்டிருக்கும் கருத்துகள் இந்திய ஒற்றுமைக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளன.

PAGE NO :368

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

‘பகைமை, வெறுப்பு, அடிமைத்தனம் இன்றி அன்புடன் வாழ்வதே வாழ்க்கையின் நோக்கம். அப்படியானதொரு சூழல் அமைந்தால் சாதி, சமூகக் கொடுமைகள் மறைந்துவிடும்’ என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக திருவள்ளுவர், விவேகானந்தர் மகாத்மா காந்தி, அம்பேத்கர், பெரியார் உள்ளிட்டோர் மற்றும் சம காலத்தவர்களின் கருத்துகளையும் இந்நூல் பதிவு செய்துள்ளது. நூல் முழுவதும் சாதிப் பாகுபாடுகள், தீண்டாமை, தீண்டாமை வடிவங்கள் குறித்து ஏராளமான விஷயங்கள் விரவிக் கிடக்கின்றன. ஏழைகளாக உள்ள அனைவருக்குமே அரசு, தனியார் வேலைவாய்ப்புகளில் ஒதுக்கீடு பெற வழி வகுக்க வேண்டும் என்ற நூலாசிரியரின் கருத்து வரவேற்கத்தக்கது. ‘ஜனநாயக இந்தியாவில் சாதிப் பாகுபாடுகளும், சாதிய வன்முறையும் ஓயவில்லை. மத நம்பிக்கைக்கும் சாதி முறைக்கும் உள்ள தொடர்புதான் இதற்கு காரணமா? சாதி – மதத் தொடர்பு உண்மையானதா? கற்பனையானதா? சமூக நீதி எல்லா குடிமக்களுக்கும் எப்போது கிடைக்கும்?’ என்பன போன்ற பல்வேறு கேள்விகளை அலசி ஆராய்வதோடு மட்டுமல்லாது அதற்கான விடையையும் தேட முற்பட்டிருக்கிறது இந்நூல். இந்தியச் சமூகம் சாதிகளால் பிளவுபட்டுள்ளது. மனிதாபிமானம் என்பதை மனதில் நிலைநிறுத்தி தீமையான சாதிய பாகுபாட்டை கைவிட இந்நூலாசிரியரால் தொகுக்கப்பட்டிருக்கும் கருத்துகள் இந்திய ஒற்றுமைக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளன.

Weight0.25 kg