இந்திய இலக்கிய சிற்பிகள் – பி.எல்.சாமி- சிலம்பு நா.செல்வராசு

100

Add to Wishlist
Add to Wishlist

Description

பெரியநாயகம் லூர்துசாமி எனும் பி.எல்.சாமி அடிப்படையில், ஓர் அறிவியல் அறிஞர். புதுச்சேரி அரசில் பல உயர்பதவிகளை வகித்தவர். இவருடைய முன்னோர்கள் சிவகங்கைச் சீமையில் இருந்து புதுவை வந்தவர்கள். குறிப்பாக, இவரது பாட்டனார் முத்துசாமி முதலியார் சிறந்த கல்வியாளர், ஆங்கிலேய அரசில் பல தொடர்புகள் உடையவர். ரயில்வேயில் ஒப்பந்தம் பெற்று கோவை, திருச்சி, தஞ்சாவூர் நகரங்களுக்கு இடையே இருப்புப் பாதைகள் அமைத்தார். இவரது மகன் வழிப்பேரன்தான் பி.எல்.சாமி.

சங்க இலக்கியங்கள் மீது பற்று அதிகம் கொண்டவர் பி.எல்.சாமி. இதன் காரணமாகவும் அறிவியல் அறிவின் காரணமாகவும், பற்பல ஆய்வுகளை நிகழ்த்தினார். சங்க இலக்கியத்தில் பூச்சிகள், பறவைகள், விலங்குகள், மீன்கள், செடிகள், கொடிகள், மரங்கள் குறித்த இவரது ஆய்வுகள் பலரிடமும் பாராட்டுப் பெற்றதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

‘சங்க இலக்கியத்தில் செடி, கொடி விளக்கம்’ (1967) என்ற நூல் தொடங்கி, ‘சங்க நூல்களில் சில உயிரினங்கள்’ (1993) வரை பதினாறு தொகுப்புகளை வெளியிட்டுள்ளதாகவும், பேராசிரியர் வ.அய். சுப்பிரமணியன் முயற்சியால் உருவான ‘அறிவியல் களஞ்சியம்’ திட்டத்தின் முதலாம் தொகுதிக்கு பி.எல்.சாமிதான் முதன்மை ஆசிரியராக இருந்தார் என்றும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

‘பண்டையத் தமிழர் தெய்வம்’ குறித்து இரு நூல்கள், முருகன் குறித்த நூல் ஆகியவற்றின் மூலமாக பண்டையத் தமிழர் தெய்வ வழிபாடுகளைப் பற்றியும், ஐயனார், பகவதி வழிபாடுகளைப் பற்றியும் விரிவாக பி.எல்.சாமி வெளிக்கொணர்ந்திருந்தார் என்றும் நூலாசிரியர் தெரிவித்துள்ளார். ஆய்வாளர்களுக்கு பயன்படும் நூல்.

Additional information

Weight0.25 kg