இந்தியக் கலைவரலாற்றில் அறுவகைத் தெய்வ வழிபாடு சக்தி, சூரியன், விஷ்ணு, சிவன், கணபதி, முருகன்

1,200

இந்தியச் சமயக் கலை வரலாற்றில் பெண் தெய்வங்கள் (சக்தியர்), சூரியன், விஷ்ணு, சிவன், கணபதி, ஸ்கந்த கார்த்திகேயன் – முருகன் முதலிய தெய்வங்களின் வழிபாடுகள் புகழ்பெற்றவையாக நெடுங்காலம் இருந்து வருகின்றன. இவற்றை வணங்கும் அடியார்கள் அவற்றைச் சமயக் கோட்பாடாக வளர்த்து முறையே சாக்தம் (சக்தியர்), செளரவம் (சூரியன்), வைணவம் (விஷ்ணு), சைவம் (சிவன்), காணாபத்யம் (கணபதி), ஸ்கந்த கார்த்திகேயன் முருகன் (கௌமாரம்) என்று அழைத்தனர். இவற்றைச் சண்மதம் -அறுவகைச் சமயம் என்று இடைக்கால இந்திய வரலாற்றில் அழைத்துப் போற்றி வளர்த்தனர்.

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
Categories: , , , Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

இந்தியக் கலைவரலாற்றில் அறுவகைத் தெய்வ வழிபாடு – முனைவர் கு. சேதுராமன் முனைவர் வெ. வேதாசலம்

பொருளடக்கம்

  1. முன்னுரை
  2. அறுவகைத் தெய்வமரபுகள்
  3. பெண் தெய்வ வழிபாடு – சாக்தம்
  4. சூரிய வழிபாடு – சௌரவம்
  5. விஷ்ணு வழிபாடு – வைணவம்
  6. சிவன் வழிபாடு – சைவம்
  7. கணபதி வழிபாடு – காணாபத்யம்
  8. ஸ்கந்தகார்த்திகேயன் – முருகன் வழிபாடு – கெளமாரம்
  9. ஆகமங்கள், வாஸ்து சாஸ்திரங்கள்
  10. துணைநூற்பட்டியல்
  11. படங்கள்

இந்தியச் சமயக் கலை வரலாற்றில் பெண் தெய்வங்கள் (சக்தியர்), சூரியன், விஷ்ணு, சிவன், கணபதி, ஸ்கந்த கார்த்திகேயன் – முருகன் முதலிய தெய்வங்களின் வழிபாடுகள் புகழ்பெற்றவையாக நெடுங்காலம் இருந்து வருகின்றன. இவற்றை வணங்கும் அடியார்கள் அவற்றைச் சமயக் கோட்பாடாக வளர்த்து முறையே சாக்தம் (சக்தியர்), செளரவம் (சூரியன்), வைணவம் (விஷ்ணு), சைவம் (சிவன்), காணாபத்யம் (கணபதி), ஸ்கந்த கார்த்திகேயன் முருகன் (கௌமாரம்) என்று அழைத்தனர். இவற்றைச் சண்மதம் -அறுவகைச் சமயம் என்று இடைக்கால இந்திய வரலாற்றில் அழைத்துப் போற்றி வளர்த்தனர்.

அறுவகைத் தெய்வங்களின் வழிபாடுகளை இந்திய வரலாற்றின் தொடக்க காலத்தில் இருந்து தொடங்கி அண்மைக்காலம் வரை கலைவரலாற்று நோக்கில் ஆய்வுசெய்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு தெய்வத்தின் தொடக்கம், அவற்றின் வழிபாட்டின் வளர்ச்சி காலவாரியாக எடுத்துக்காட்டுகளுடன் வரலாற்று முறையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், அத்தெய்வங்களின் வடிவங்கள், அவற்றின் வளர்ச்சியும் மாற்றமும் காலவாரியாக எடுத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்தியச் சமய வரலாற்றின் தனித் தனியான வழிபாடாக இருந்த இவ்வழிபாடுகளில் ஒத்த தன்மையுடையன ஒன்றாக இணைக்கப்பட்டுப் பெருந்தெய்வ வழிபாடாக மாறின. இவற்றில் ஒத்த தன்மையுடைய வட இந்திய மரபும் தென்னிந்திய மரபும் காலப் போக்கில் இணைக்கப்பட்டு ஒன்றாக வழிபடப்பட்டன. ஆதிக்க மரபுகள் சிறுபான்மை மரபுகளை உள்வாங்கி தன்மயமாக்கிக் கொண்டன.

இந்தியா முழுமையும் பல்லாண்டுகள் பயணம் செய்து திரட்டப்பட்ட தரவுகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சமய முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களுக்கும் கலை வரலாற்றுச் சின்னங்களுக்கும் அருங்காட்சியகங்களுக்கும் ஆய்வுப் பயணங்கள் மேற்கொண்ட முனைவர் வெ.வேதாசலம் அவர்களால் எடுக்கப்பட்ட 160க்கும் மேற்பட்ட வண்ணப் புகைப்படங்கள் இந்நூலினை அணிசெய்கின்றன. வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், கல்வெட்டுகள், வடமொழி, தமிழ்மொழி இலக்கியங்களி லிருந்து இத்தெய்வ வழிபாடுகள் குறித்த தரவுகள் திரட்டப்பட்டு இந்நூலாக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

முனைவர் கு. சேதுராமன்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தில் முப்பத்தாறு ஆண்டுகள் பணியாற்றி, கலை வரலாற்றுத்துறைத் தலைவராக ஓய்வு பெற்றவர். முப்பதுக்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வாளர்களை உருவாக் கியவர். இந்தியக் கலை, வரலாறு குறித்து பதினைந்து நூற்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

இவரது ‘பௌத்தக்கலை வரலாறு’ என்னும் நூலுக்கு 2013ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான விருது தமிழக அரசால் வழங்கப்பெற்றுள்ளது. இவர் இன்றும் கலை வரலாற்றுப் பணிகளைத் தொடர்ந்து செய்து வரும் கலை வரலாற்றுப் பேராசிரியர் ஆவார்.

முனைவர் வெ. வேதாசலம்

தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையில் முப்பத்து நான்கு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். தொல்லியல் துறையில் அருங்காட்சியகக் காப்பாட்சியர், முதுநிலை கல்வெட்டாய் வாளர், அகழாய்வாளர் ஆகிய பணிப் பொறுப்புகளில் இருந் துள்ளார். கரூர், கோவலன்பொட்டல் (மதுரை), திருத்தங்கல், மாங்குடி, தொண்டி, அழகன்குளம், கீழடி, கொடுமணல் முதலிய இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் பங்கு கொண்டுள்ளார்.இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களையும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டு உள்ளார். தமிழ்நாட்டிலும் வெளிமாநிலங்களிலும் இலங்கை யிலும் மாணவர்களுக்குத் தொல்லியல், கல்வெட்டு, கலை வரலாறு குறித்துப் பயிற்சி வகுப்புகள் நடத்தியுள்ளார். தமிழ்நாட்டிலுள்ள பல பல்கலைக்கழகங்களில் அறக்கட் டளைச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியதோடு அவற்றில் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். பதினாறுக்கும் மேற்பட்ட அயல்நாடுகளுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

அறுவகைத் தெய்வமரபுகள் (அறுவகைச் சமயங்கள்)

இந்தியாவின் தொன்மையான சமயங்களில் பல்வேறு தெய்வங்களை வணங்கும் வழக்கம் இருந்து வந்தது. இத்தெய்வங்களில் சில ஒரு காலத்தில் சிறப்புப் பெற்றிருந்தன. வேறு சில தெய்வங்கள் சிறப்புப்பெறத் தொடங்கியபோது முதலில் உச்சநிலையிலிருந்த தெய்வங்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டன. இவ்வாறு காலந்தோறும் மாறுதல்கள் நடைபெற்றுக்கொண்டு வந்தன. ஒரு காலத்தில் உன்னத நிலையிலிருந்தவர்கள் மற்றொரு காலத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். உதாரணமாக ரிக்வேத காலத்தில் முதன்மையிடத்தைப் பெற்றிருந்த இந்திரன், வருணன், அக்னி, பிரம்மா, சூரியன் ஆகியோர் பிந்திய வேத காலத்திலும் புராண காலத்திலும் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். தொடக்கத்தில் ஏதோ ஒரு இடத்தைப் பெற்றிருந்த விஷ்ணுவும் சிவனும் (ருத்ரன்) இதிகாச புராண காலங்களில் முதன்மையிடத்தைப் பெற்றனர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளின் நிலை உயரலாயிற்று. இத்தெய்வங் களை வணங்கியோர் ஒருங்கிணைந்து பௌத்த, சமண சமயத்தினரை ஒடுக்கப் பாடுபட் டனர். அச்சமயங்கள் தங்களது செல்வாக்கை இழந்த தருணத்தில் வைதீக சமயப் பிரிவின ரிடையே காழ்ப்புணர்ச்சி ஏற்படத் தொடங்கியது. ஒரு சமயப் பிரிவினர் மற்றதொரு சமயப் பிரிவினரைத் தங்களுக்குக் கீழானவர்கள் என்று கருதத் தொடங்கினர். இதனால் தாங்கள் வணங்கும் தெய்வமே மற்ற தெய்வங்களைவிட உயர்ந்ததும் சக்தி வாய்ந்ததும் ஆகும் என்று நம்பினர். அதற்கான செய்திகளைத் தொகுத்தனர். அவையே சமய இலக் கியங்களாகவும் தொன்மக் கதைகளாகவும் மலர்ந்தன.

வேதத்தில் “ஏகம் ஸத் விப்ரா பஹீதா வதந்தி” என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, ‘மெய்ப்பொருள் ஒன்று. சான்றோர் அதற்குப் பல பெயர்களிட்டிருக்கின்றனர். என்பதாகும். அதாவது ஒரே இறைவனுக்குப் பல பெயர்கள் உண்டு. பல பெயர்களைக் கொண்டு பல தொழில்களைச் செய்பவனும் ஒரே இறைவனே என்றெல்லாம் பேசப்பட்டது. இந்தியச் சமயங்களின் இந்நிலையினை மாக்ஸ்முல்லர் ‘ஹீனோதியிஸம்’ என்று கூறினார். எனவே, ஒரு பக்கம் ஒவ்வொரு சமயப் பிரிவினரும் தங்களது கடவுளே முதன்மையானவர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நிலையும் அனைத்தும் ஒருவனே இறைவனில் பேதமில்லை என்று கூறும் நிலையும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இதனை இந்தியச் சிற்பக்கலை வளர்ச்சியிலும் காணமுடிகிறது.

Weight0.650 kg