“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!”
இது மகாகவி பாரதியின் விடுதலைப் பாட்டு.
இன்று சில சுய நலமிகள், இந்த மா கவிஞனின் வாக்கியத்தை, விடுதலை வீரர்களின் வாய் முழக்கமிட்ட தேசிய எழுச்சி இந்த வாசகத்தை மாற்றிப் பாடத் தொடங்கியுள்ளனர்.
ஆம், “இந்து முஸ்லிம் ஒன்று பட்டால் உண்டு தாழ்வு! இந்த ஒற்றுமை நீங்கின் நமக்கு நல் வாழ்வே!” எனக் கூக்குரலிட முனைந்து விட்டனர்.
நமக்குள் ‘பிளவு’ உண்டாக்கும் வேலை யாரால் எப்பொழுது ஆரம்பமாயிற்று, அதனால் நாமும் நாடும் அடைந்த துன்பம் என்ன? என்பதை இக்கால இளைஞர்களின் மனத்திலே பதிய வைத்திட இச்சிறு நூல் உதவும்.