இஸ்லாமிய பார்வையில் நேர நிர்வாகம் – எம். எஸ். அப்துல் ஹமீது

150

Add to Wishlist
Add to Wishlist

Description

நேரம் குறித்த அங்கலாய்ப்பு நம் எல்லோருக்கும் உண்டு. வாழ்வில் வெற்றி பெற்றவர்கள்/வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பவர்கள் என அனைவரும் நேரத்தின் போதாமை மற்றும் நேர நிர்வாகத்தின் அவசியம் குறித்து உணர்ந்திருக்கின்றனர்.

அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டியான இஸ்லாம் நேரம் குறித்து மனிதர்களை கடுமையாக எச்சரிக்கின்றது. தற்போது நிர்வாகவியல் துறையில் நிபுணர்களாக உள்ளவர்கள் நேர நிர்வாகம் என்பதை “கலை’ என்பதோடு, உலகியல் வெற்றியின் தேவையெனவும் அதை வலியுறுத்துகின்றனர். இஸ்லாம் இதனிலும் ஒரு படி மேலே போய் நேரத்தை முறையாகச் செலவழிப்பது என்பதை ஒரு கடமையாகவே குறிப்பிடுகின்றது.

நவீன நிர்வாக தத்துவங்களோ உலகியல் வெற்றி குறித்து பேசும் போது இஸ்லாமோ இம்மை மற்றும் மறுமை வெற்றியையும் இணைத்தே பேசுகிறது.
தமிழ் இஸ்லாமிய பதிப்புலகில் நேர நிர்வாகம் குறித்து முதன் முதலாக வெளிவரும் இந்நூல் ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

Additional information

Weight0.25 kg