தமிழ் இலக்கியப் பரப்பில் ஆகச்சிறந்த தன்வரலாற்றுப் புதினங்கள் வரிசையில் வலுவான வாசக தளத்தை வசமாக்கிக்கொண்ட சிலுவைராஜ் சரித்திரத்தின் தொடர்ச்சியாக விரிவடைகிறது இந்நாவல்.
சிறுபராயத்திலிருந்து வாழ்வு,காலம்,சமூகம் என ஒவ்வொன்றாக துரத்தியடித்து அலைக்கழிக்கப்படும் ஒரு எளிய மனிதன் அசராது தன் முயற்சியாலும் சாதுர்யங்களாலும் அவற்றை எதிர்கொண்டு அசைக்கவியலாத சாதனையாளனாக தன்னை நிலை நிறுத்திக்கொள்வதை இந்நாவலை வாசிப்பவர்கள் உணரலாம்.
துள்ளலும் எள்ளலும் பகடியும் கைகூடப்பெற்ற தனித்துவ எழுத்துநடை வாசகனின் வாசிப்பனுபவத்திற்கு சுவை கூட்டுகின்றன.