கல் மேல் நடந்த காலம்
தமிழில் நன்கு அறியப்படாத சில ஆளுமைகளை இந்நூல் அறிமுகம் செய்கின்றது. சிந்து சமவெளி பற்றி பர்ப்பொலாவின் நேர்காணலும், திராவிட உறவுமுறை பற்றி வரலாற்றாசிரியர் ட்ரவுட்மனின் பதிவும், தமிழக ஓவியங்கள் பற்றி ஜோப் தாமஸின் பங்களிப்பும் எடுத்துக்காட்டுகள். தமிழக வரலாறு பற்றிய நம் கண்ணோட்டத்தை இவை விரிவுபடுத்தும்.
இன்று நமது பாரம்பரிய கலைச் செல்வங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் தொல்லியலிலும் கலை வரலாற்றிலும் ஒரு புதிய ஆர்வம் பரவி வரும் பின்புலத்தில் தான் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.