இந்நூல் வைதீக சாதி சமய ஆதிக்க சக்திகளுக்கு ஒவ்வாமை தரலாம்.
கலி, பரி என்று அகவலிலிருந்து வேறுபட்ட இசைமயமான யாப்புகளால் இயற்றப்பட்ட மதுரை சார்ந்த கலித்தொகையும், பரிபாடலும் முறையான வரலாற்றுக் காலகட்டத்தில் கொண்டு வரப்பட்டு இடைச்செருகல்களும் வைதீகப் புனைவுகளும், வைதீக மதுரை பாண்டியரின்
பௌராணிகமயமாக்கங்களும் இந்த நூலில் “விளிம்புநிலை” நோக்கில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
இந்நூலை விரிவான வாசகதளம் புரிந்துகொள்ளும் நோக்கில் கலிப்பாடல்களும், பரிபாட்டுக்களும் தனித்தனியாக எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டுள்ளன இடையிடையே விமர்சனங்களும் ஆய்வு முடிவுகளும் தொகுத்து- விரித்து உரைக்கப்படுகின்றன.