கல்லெழுத்துக்கலை – நடன. காசிநாதன்

250

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

உள்ளுறை

1. எழுத்தின் தோற்றம்

2. தொன்மைத் தமிழ் எழுத்து

3.வட்டெழுத்து

4. தமிழ் எழுத்து

5. கிரந்த எழுத்து

6.எண்கள்

7. கல்வெட்டுப்படி எடுக்கும் முறை

8. கல்வெட்டாய்வு

பகுதி இரண்டு

1.உருவ எழுத்து

2. எழுத்துக் கலை

3. பண்டைத் தமிழ் எழுத்து – ஓர் ஆய்வு

4. வட்டெழுத்து – ஓர் ஆய்வு

5. பல்லவர் காலச் செப்பேடுகள்

6.பாண்டியர் காலச் செப்பேடுகள்

7. சோழர் காலச் செப்பேடுகள்

8. New readings and interpretations of the Old Tamil Epigraphs

9. தொன்மைத் தமிழ்க் கல்வெட்டுகள்- புதிய படிப்பும் விளக்கமும்

10. Pulankuricci Inscription – a relook

11. கல்லெழுத்துச் சொல், பொருள்

நூலாசிரியர் தொல்லியலறிஞர் நடன. காசிநாதன்

கடலூர் மாவட்டம் நெய்வேலிக் கருகிலுள்ள தொப்பளிக்குப்பம் என்னும் சிற்றூரில் எளிய வேளாண்குடியில் திரு. நடன சபாபதி – திருமதி. ருக்மணி தம்பதியருக்கு 1940இல் பிறந்தவரான நடன. காசிநாதன், சிதம்பரம் இராமகிருட்டிணர் உயர்நிலைப் பள்ளியிலும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் முதுகலை முடிய கல்வி பயின்று. தமிழ் நாட்டரசு தொல்லியல் துறையில் 1967இல் கல்வெட்டாய்வாளராகப் பணியில் சேர்ந்து, 1989இல் அத்துறையில் இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார். 1998இல் ஒய்வு பெற்றார்.

தம் பணிக்காலத்தில் பல அரிய கண்டுபிடிப்புகளையும், சில புதிய செயல் திட்டங்களையும் இவர் நிகழ்த்தியிருந்தார். 1984ஆம் ஆண்டு தஞ்சைத் தரணியில் சோழப்பெருவேந்தன் முதலாம் இராசராசன் முடிசூட்டப்பெற்றதின் 1000-மாவது ஆண்டு விழா கொண்டாடியதும், அதனையொட்டித் தஞ்சையில் இராசராசன் அகழ்வைப்பகம் ஏற்படுத்தியதும், தஞ்சை மாவட்டம், பூம்புகாரில் கடலகழாய்வை மேற்கொண்டு கடலினுள், கி.மு. 5ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஐந்து கட்டட அமைப்புகளைக் கண்டுபிடித்ததும், கி.பி. 18ஆம் நூற்றாண்டையச் சிதைந்த கப்பல் ஒன்றைக் கண்டு பிடித்ததும், 1994இல் தஞ்சையில் நடைபெற்ற எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டினையொட்டி தஞ்சாவூர் அரண்மனை, மதுரைத் திருமலை நாயக்கர் அரண்மனை. சரபேந்திரராசன்பட்டினம், மனோரா, தரங்கம்பாடி கோட்டை, இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் ஆகியவற்றை அவற்றின் பழமைத் தன்மை மாறாது சீர் செய்ததும் குறிப்பிடத்தக்கவை. இவர் இலங்கை, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குக் கல்விப் பயணம் சென்று வந்துள்ளார்.

பணி ஓய்வுக்குப் பின்பு, தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் என்னும் அமைப்பை ஏற்படுத்தி, இதுவரை வரலாற்றுக் கருத்தரங்குகள் ஒன்பது நடத்தி, ஆய்வுக் கட்டுரைகளடங்கிய எட்டு நூல்களை வெளிக்கொணர்ந்தார். இவர் 77 நூல்களை எழுதியிருக்கிறார். இவற்றில் 59 தமிழ் நூல்கள்: 18 ஆங்கில நூல்களாகும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் ஆளவை உறுப்பினராகவும், நடுவணரசு இந்திய மொழிகள் நிறுவனத்தின் சான்றாதார வல்லுநராகவும், தமிழ் நாட்டரசு வரலாறு எழுதும் வல்லுநர் குழுவின் உறுப்பினராகவும், வன்னியர் வரலாறு தொகுப்புக் குழுவின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

இவ்வாசிரியர், தமிழ்த்துறைப் பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவி அவர்களால் ‘காசுநாதன்’ என்றும், கண்ணியம் இதழ் ஆசிரியர் முனைவர் குலோத்துங்கன் அவர்களால் ‘கல்வெட்டுச் செம்மல்” என்றும், பதிப்புச் செம்மல் முனைவர் ச. மெய்யப்பன் அவர்களால் ‘தொல்லியல் அறிஞர்” என்றும், கல்வெட்டுப் பேரறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்களால் ‘கல்வெட்டறிஞர்’ என்றும், முனைவர் இள. நாகசாமி அவர்களால் ‘வட்டெழுத்தில் வல்லவர்” என்றும், தமிழ்க் குடிதாங்கி மருத்துவர் ச. இராமதாக ஓயா அவர்களால் ‘தமிழ்ச் செம்மல்” என்றும், ‘வரலாற்றுத் திலகம்’ என்றும், சிற்பகுரு முனைவர் வை. கணபதி ஸ்தபதி அவர்களால் ‘கல் எழுத்துச் சொல் ஓவியர்” என்றும், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் மாவீரன் செ. குரு அவர்கனால் ‘வன்னியர் குலக்குரு” என்றும், திருவையாறு ‘தமிழய்யா கல்விக் கழகத்தால் ‘வரலாற்றுப் பேரறிஞர்” என்றும் பாராட்டப்பட்டிருக்கிறார்.

Weight0.5 kg