கல்வெட்டுச் சொற்களின் பொருட்புல அடைவு (கி.மு.300 முதல் கி.பி. 1300 வரை)

Original price was: ₹1,800.Current price is: ₹1,699.

கல்வெட்டுச் சொற்களையும் தொடர்களையும் அகர வரிசையில் அமைத்துச் சொற்களுக்குப் பொருள் தரும் முறையிலிருந்து விலகிச் சொற்களையும் தொடர்களையும் அவை எந்தப் பொருட்புலங்களை (subject-domain) சார்ந்தவை என அறிந்து வகைப்படுத்தித் தருதல் என்ற சிறப்பான முறையைக் கைக்கொண்டு இந்த ஆக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கல்வெட்டுச் சொற்களின் பொருட்புல அடைவவு (கி.மு.300 முதல் கி.பி. 1300 வரை) – A Thematic Concordance of Terms from Inscriptions

புத்தக உள்ளடக்கம்

1. அரசியல்

1. அரசர்கள்.
2. அரசு நிருவாகம்
3. ஆவணங்கள்.
4. இடப் பெயர்கள்.
5. உள்ளூர் நிருவாகம்
6. சட்டமும் நீதியும்
7. சிற்றரசர்கள்
8.நாட்டுப் பகுதிகள்.
9. படைகள்
10. வரிவிதிப்பு.

2.சமயம்

1.கோயில் உணவுகள்.
2. கோயில் நிருவாகம்
3. திருவிழாக்கள்.
4. துறவிகள்
5.தெய்வங்கள்
6.வழிபாடு
7.வழிப்பாட்டு இடங்கள்.
8. வழிபாட்டுப் பொருள்கள்.

3.சமுதாயம்

1.உறவுமுறை
2.கல்வி
3.குடியிருப்புகள்
4. சமூகப்பிரிவுகள்
5. மக்கள் பெயர்கள்.

4.பண்பாடு

1. ஆடை, அணிகலன்கள்.
2. அறச்செயல்கள்.
3. ஆடல் பாடல் கலைகள்.
4.உணவுப் பொருள்கள்
5. கட்டடக் கலை.
6.காலமுறை
7. நினைவுச் சின்னங்கள்..
8. புழங்கு பொருள்கள்.
9. வழக்காறுகள்.

5.பொருளியல்

1. அளவைகள்.
2. தொழில்கள்
3.நில உரிமை.
4. நிலவகைகள்
5. நீர் ஆதாரங்கள்.
6. பணப் பரிமாற்றம்
7. வணிகப் பொருள்கள், பரிமாற்றம்
8. வணிகம், வணிகர்கள்.
9. வேளாண் பொருள்கள்.
10. வேளாண்மை.

6.பொது சொல்லடைவு

பதிப்பாசிரியர்கள்: பா.ரா.சுப்பிரமணியன் ப.சண்முகம்

பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலை, அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், ஆடை அணிகலன்கள் குறித்த செய்திகளை அறிய, தமிழ்நாட்டில் நடைபெற்ற அகழ்வாய்வுகளும், அவற்றின்மூலம் கிடைக்கப்பெற்ற எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும், குறியீடுகள், கல் மணிகள், பிறநாட்டுக் காசுகள், செம்புப் பொருட்கள் முதலான பொருட்களும் துணைசெய்கின்றன.

கீழடியில் நடைபெற்ற அகழ்வாய்வுச் சான்றுகளின் மூலமாகப் பழந்தமிழின் தொன்மை தொடர்பாக இதுவரை நிலவிவந்த கருதுகோள்களுக்கு உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டு நகரமயமாதல் கி. மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது என்பதும் கீழடி அகழ்வாய்வால் உறுதியாகியுள்ளது; தமிழ் – பிராமி எழுத்து வடிவத்தின் காலத்தை இன்னும் பின்னோக்கி எடுத்துச் செல்லத்தக்கச் சான்றுகள் கிடைத்துள்ளன.

கல்வெட்டுச் சான்றுகள் நேரடியான வரலாற்றுப் பேராவணமாகத் திகழ்வனவாகும். கல்வெட்டுகள் நூற்றாண்டுகள் பல கடந்து நிலைபெற்று நீடித்து, வரலாற்றுச் செய்திகளையும், அவை எழுதப்பட்ட கால மொழி, எழுதியவர்கள், எழுதுவித்தவர்கள், அக்காலத்துச் சமூக நிலை முதலிய செய்திகளையும் நமக்கு அளிக்கின்றன. மொழி, சமூகம் சார்ந்த வரலாற்றுத் தகவல்களை அறிய மிகமுக்கிய ஆவணங்களாகக் கட்டுவெட்டுகள் அமைகின்றன.

தமிழக அரசியல், சமூக, பண்பாட்டு வரலாற்றிற்குப் பல நிலைகளில் பயன்தரக்கூடிய ஆவணமாகத் தென்னிந்திய, குறிப்பாகத் தமிழகக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் திகழ்வதை அறிந்துணர்ந்து மொழி அறக்கட்டளை கல்வெட்டுகளை மையப்படுத்திய ‘கல்வெட்டுச் சொற்களின் பொருட்புல அடைவு’ (A Thematic Concordance of Terms from Inscriptions) என்ற ஓர் ஆய்வுத் திட்டத்தினைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு அளித்தது. அத்திட்டத்தைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மகிழ்ச்சியுடன் ஏற்று, வேண்டிய நிதியினை அளித்தது. அந்த ஆய்வுத் திட்டம் தற்பொழுது நூலாக வெளிவருகிறது.

கல்வெட்டுச் சொற்களையும் தொடர்களையும் அகர வரிசையில் அமைத்துச் சொற்களுக்குப் பொருள் தரும் முறையிலிருந்து விலகிச் சொற்களையும் தொடர்களையும் அவை எந்தப் பொருட்புலங்களை (subject-domain) சார்ந்தவை என அறிந்து வகைப்படுத்தித் தருதல் என்ற சிறப்பான முறையைக் கைக்கொண்டு இந்த ஆக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கல்வெட்டுச் சொற்களுக்கு இதுவரை வெளியாகியிருக்கும் சொல்லடைவுகளிலிருந்து வேறுபட்ட புதிய அணுகுமுறையில் இந்த ஆக்கம் அமைந்திருப்பது சிறப்புக்குரியதாகும்.

Weight1.5 kg
Edition:

1