Description
வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்; திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால்; உண்மை இல்லைபொய் உரைஇ லாமையால்; வெண்மை இல்லைபல் கேள்வி மேவலால். – கம்பர். >>> கம்பன் என்ற கவிஞன் ஒரு சமத்துவச் சமுதாயத்தையும் சமதர்ம அரசியலையும் கனவு காண்கிறான் தான் படைத்த காவியத்தில் கோசலை நாட்டையும் அயோத்தி வேந்தனையும் வைத்து அரசியல் சூழ்ச்சிகளை விரித்துரைத்து மக்கள் நல்வாழ்வுக்கான அரசியல் நெறிகளை விரிவாகப் பேசுகிறான். இவை குறித்த அ.ச.ஞாவின் ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். கோசலை நாடு கம்பன் கண்ட கனவு.





















