இந்நூல் ஏழு அதிகாரங்களாக அமைக்கப்பட்டுள்ளது முதலிரண்டு அதிகாரங்களில் இராமலிங்கர் வாழ்ந்த காலச் சூழலும், நிகழ்ச்சிகளும், ஆசார, சமய, சீர்திருத்த முயற்சிகளும், மரபான தமிழ்க்கல்வி முறையும் சைவக் கல்வியும், ஆதீனங்களின் செயல்முறைகளும் தொகுத்துரைக்கப்பட்டுள்ளன.
மற்ற ஐந்து அதிகாரங்களும் அகநிலை ஆய்வுகளாகும் இராமலிங்கரின் பாடல்கள் கடிதங்கள், வசன நூல்கள், உபதேசங்கள் ஆகியவற்றின் சான்றுகளோடு அவரது ஆன்மீகப் பயணத்தின் பரிணாம வளர்ச்சி ஆராயப்படுகிறது.
இறுதியாக பின்னுரையில் அவரது மரணம் பற்றிய சிறிய விளக்கம் இடம்பெற்றுள்ளது.
இராமலிங்கரைப் பற்றி சற்று வித்தியாசமான பார்வையில் எழுதவேண்டும் என்ற குறிக்கோளில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.