திரு.சுதாராஜ் அவர்களின் இவ்வாக்கமானது 1990களில் தொழில் தேடிச் சென்ற யாழ் குடாநாட்டுப் பொறியாளர் ஒருவரின் அனுபவங்களையே கதையம்சமாக வளர்த்துச் செல்கிறது. அவ்வகையில் இவ்வாக்கம் 1990களின் காலகட்ட ஈழச் சூழலையும் வெளியுலகச் சூழலையும் அருகருகே பொருத்திக் காட்டும் ஒரு வரலாற்றுப் பதிவாகக் கொள்ளப்பட வேண்டியதாகும்.
-பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியன்
நன்கறியப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகளையும், விதந்து கூறத்தக்க சிறுவர் இலக்கியங்கள் பலவற்றையும் தந்த சுதாராஜின் இரண்டாவது நாவல் இது. உண்மையில் அவருடைய கடல்சார் அனுபவங்கள், கண்ணோட்டம், கலையாற்றல் இவற்றை வைத்துப் பார்க்கையில் அவருடைய புதினங்கள் பல ஏற்கெனவே வந்திருக்க வேண்டும் என்று பல வேளைகளில் எண்ணியவன் நான். அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்வதுபோல் இப்போது வந்திருக்கிறது, ‘கப்பல் கடல் வீடு தேசம்.’
-எழுத்தாளர் சாந்த