குமரி நாட்டில் சமணம் (தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சி)

650

தமிழகத்தின் பழங்கால சமயங்களில் சமணமும் ஒன்று. சமண சமயத்தைச் சேர்ந்த அகத்திய முனிவர் பதினெண்குடி வேளிர், அருவாளர்களோடு தென்னகத்திற்கு வந்து, காடுகளை அழித்து நாடுகளாக்கி மக்களைக் குடியேற்றினார் என்பதும், வடக்கிலிருந்து பத்திரபாகு என்ற சமண முனிவர் மைசூர் நாட்டில் உள்ள சிரவணபௌகெள குகையில் தங்கி, அவருடைய சீடரான விசாக முனிவரை சமண மதத்தைப் பரப்புவதற்காக தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார் என்பதும் சமண மதம் வடக்கிலிருந்து தமிழகத்துக்கு வந்தது என்பதையே சொல்கின்றன. இதற்கு மாறாக, உண்மையில் தமிழகத்தின் மிகப் பழமையான மதம் சமண மதம் என்கிறார் நூலாசிரியர்.

சமண மதத்தின் தோற்றம், வளர்ச்சி, தமிழகத்தில் அதன் வீச்சு ஆகியவற்றை விளக்கும் நூலாசிரியர், குமரி மாவட்டத்தில் சமண சமயம் பெற்றிருந்த செல்வாக்கை பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் குறிப்பாக எடுத்துக் காட்டுகிறார்.

சமண மதக் கோயில்களின் வழிபாட்டு நடைமுறைகள் சில, இன்றைய வழிபாடுகளிலும் இருப்பது, தமிழகத்தில் சமண சமயம் அழிந்து போனதற்கான காரணங்கள், தமிழ் இலக்கியத்தில் சமண சமயத்தின் தாக்கங்கள் என நிறைய செய்திகளை இந்நூல் சொல்கிறது. தமிழக மக்களின் இறை நம்பிக்கை, வழிபாட்டு முறைகள் எவ்வாறெல்லாம் மாறி வந்திருக்கின்றன என்பதை இந்நூல் மூலம் தெரிந்து கொள்ளலாம். அரிய முயற்சி.

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.