மாமதுரை

550

Add to Wishlist
Add to Wishlist

Description

மாமதுரை என்னும் இந்நூல் மதுரையைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும், வரலாறு மற்றும் சமய ஆய்வாளர்களுக்கும் பயனுடைய நூல்.

பல்வேறு அரசர்கள் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு அரசுபுரிந்த
அரசியல் வரலாற்று நூல், இந்நூல் கல்வெட்டு, செப்புப்பட்டயம், மெய்க்கீர்த்திகளை அடிப்படையாகக் கொண்டு அரசர்களின் வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டுள்ளது.

மதுரையைத் தலைநகராகக் கொண்டு நெடுஞ்செழியன் என்ற பாண்டிய அரசன் கி.மு. 5ஆம் நூற்றாண்டளவில் ஆட்சி புரிந்துள்ளான். அவனைத் தொடர்ந்து 40 பாண்டிய மன்னர்கள் ஆட்சிபுரிந்துள்ளனர். கிறிஸ்துவின் பிறப்புக்கு முன்னரே பாண்டிய மன்னர்கள் பல நாடுகளுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.

சுல்தான்களின் ஆட்சிக்குப்பின் விசயநகரப் பேரரசின் கீழ் நாயக்க மன்னர்கள் மதுரையை ஆளத் தொடங்கினர்.

மதுரை அரசியலுக்கு மட்டுமே தலைமையிடமாக விளங்காமல் சைவம், வைணவம், சமணம் போன்ற சமய வளர்ச்சிக்குரிய தலமாகவும் விளங்கியுள்ளது.

நாயக்க மன்னர்களுடைய ஆட்சியில் நிர்வாகம், சமயம், கலை, இலக்கியம் சிறப்புடன் விளங்கியதை நூலாசிரியர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

 

ISBN : 9788123443706
Author : P. Irasendran, Sandhalingam
Weight : 100.00 gm
Binding : Paper Back
Language : Tamil
Publishing Year : 2023

Price : 550

 

Additional information

Weight0.4 kg