Description
மதுரை மண்ணின் வரலாற்றோடு சமண சமயத்தின் வரலாறும் பின்னிப் பிணைந்துள்ளது. தமிழகத்தில் சங்ககாலம் தொடங்கி கி.பி.12-ஆம் நூற்றாண்டுவரை சுமார் 1500 ஆண்டு கால வரலாறு சமணசமயத்திற்கு உண்டு. சமண சமயத்தின் செல்வாக்கு விரும்பியோ விரும்பாமலோ தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டது. நோன்பு, விரதம், வடக்கிருத்தல், தீபாவளி, சரஸ்வதி பூஜை போன்ற பல பண்பாட்டுக் கூறுகள் சமண வைதீகச் சமயங்களுக்கும் பொதுவாகிவிட்டன. அம்மணம் (நிர்வாணம்) சம்மணன்கால் போட்டு அமர்தல் போன்ற செயல்கள் சமணத்தின் ஆழ்ந்த செல்வாக்கால் ஏற்பட்டவையே.