மகாகவி பாரதியார் கதைகள் பன்முக நோக்கு – முனைவர் பெ. சுப்பிரமணியன்

330

பாரதியார் என்ற பெயரைக் கேட்டவுடன் அவருடைய கவிதை முகம் மட்டுமே பலருக்கும் நினைவில் வரும். ஆனால், அவர் கதாசிரியர், கட்டுரையாளர், மொழி பெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகம் கொண்ட  படைப்பாளி. குறிப்பாக, மிகச் சிறந்த கதைசொல்லி. அவர்,  23 சிறுகதைகளை எழுதியுள்ளார். மேலும், குறுநாவல்கள் (2), நெடுங்கதைகள் (3), நகைச்சுவைக் கதைகள் (3),  பறவைக் கதைகள் (2), மிருகம் பற்றிய கதை (1) ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.  

பாரதியாரின் கவிதைகள் ஆய்வு செய்யப்பட்ட அளவுக்கு அவருடைய கதைகள் ஆய்வு செய்யப்படவில்லை என்பதே உண்மை. அக்குறையை இத்தொகுப்பு போக்கியுள்ளது. 
இதில் பாரதியாரின் அனைத்துக் கதைகளும் தொகுக்கப்பட்டு விரிவான நோக்கில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையையும் படிக்கும்போது ,  அனைத்துத் துறைகளிலும் இருந்த தெளிவும் தேர்ச்சியும் நன்கு புலப்படுகிறது. குறிப்பாக “ஆறில் ஒரு பங்கு’ (இதுதான் தமிழின் முதல் சிறுகதை – சி.சு. செல்லப்பா), “சந்திரிகையின் கதை’ (விதவைத் திருமணம் பற்றிய கதை) போன்றவை அவை எழுதப்பட்ட காலகட்டத்தை ஒப்பிட்டு நோக்கும்போது வியப்பு மேலிடுகிறது.

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.