இசை நாடக வடிவில் அமைந்த இராமச்சந்திர கவி ராயரின் ‘ஸ்ரீ மகாபாரத விலா சம்- சூது துகிலுரிதல்’ நூலின் ஆராய்ச்சிப் பதிப்பாக சிவ. விவேகானந்தனால் மீண்டும் வெளியிடப்பட்டுள்ள இந்த நூலில் மகாபாரதத்தில் தருமர் சூதாடியது முதல் வனவாசம் சென்றது வரையிலான நிகழ்வு கள் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன. சூதாட்டம் பற்றி பழந்தமிழ் இலக்கி யங்களில் காணப்படும் குறிப்புகளை ஓரிடத்தில் கொண்டு வந்துள்ளார் நூலாசிரியர். சம காலத் தில் உலகம் முழுவதும் சூதாட்டம் பல்வேறு வடிவங்களில் நடைபெற்றுக்கொண்டிருப்பதும் குறிப் பிடப்பட்டுள்ளது.
பண்டைக் காலத்தில் இருந்த சூதாடும் கருவிகளின் அமைப்பு, பயன்பாடு தெளிவாகக் காட்டப் பட்டுள்ளது. சகுனியுடன் தருமர் சூதாடிய முத லாம் ஆட்டம் முதல் ஐந்தாம் ஆட்டம் வரையி லான நிகழ்வுகள் ஒருசேர அமைந்திருப்பது சிறப் தி பானது. மகாபாரத கதாபாத்திரங்களின் பிறப்பு, இ குணநலன்கள், அவர்களின் தனித் திறன்கள், சிறப் புகள் ஆராய்ச்சி நோக்கில் வெளியிடப்பட்டுள் ளன. அந்த கதாபாத்திரங்களை அகர வரிசையில் இ அமைத்து விளக்கியிருக்கும் விதம் பாராட்டுக்குரி யது. தலைமை கதாபாத்திரம், துணை கதாபாத்தி ரங்கள் வாயிலாக அவை காப்பியத்துடனும், சமூ கத்துடனும் ஒன்றியிருப்பது தெரிய வருகிறது. சில இடங்களில் காணப்படும் எழுத்துப் பிழைகளைத் தவிர்த்திருக்கலாம். கதையின் ஒவ்வொரு காட்சிக் கும் இடையே துணைத் தலைப்புகள் கொடுக்கப் பட்டு, வாசிப்பவரை ஆர்வத்துடன் தொடர்ந்து படிக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. பாடல் குறிப்புகளுக்கான விளக்கமாக அருஞ் சொல் அகராதியில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளது சிறப்பு. மகாபாரதத்தில் முக்கிய ‘தி நிகழ்வாக கருதப்படும் சூதாட்டத்தை கருப்பொரு ளாகக் கொண்டு, இசை நாடக வடிவில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது என்பது மாறுபட்ட கண்ணோட்டம்தான்.
பக்கங்கள்: 489