மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய அந்தாதி இலக்கியங்களை ஆய்வு செய்து மறைந்த பேராசிரியர் கெ.சுப்பராயலு அவர்கள் எழுதிய நூல் இது. ஐந்து இயல்களில், ஆசிரியரின் வரலாறும் படைப்புகளும், அந்தாதி இயக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், ஆசிரியரின் அந்தாதி இலக்கியங்கள், இலக்கியச் சிறப்பு, சமயச் செய்திகள் எனப் பகுத்து விரிவாகவும், ஆழ்ந்த புலமைத் திறனுடனும் படைத்துள்ளார். ஆசிரியருடைய அந்தாதி நூல்களைப் பற்றித் திறனாய்வு செய்வதால் திறனாய்வு அணுகுமுறையும், அவரது நூல்களில் கூறப்படும் செய்திகளை வகைப்படுத்திப் பகுத்து ஆராய்வதால் பகுப்பாய்வு அணுகுமுறையும் பின்பற்றப்படுகின்றன. இந்த ஆய்வேடு 37ஆண்டுகள் கழித்து நூல் வடிவம் பெற்றுள்ளது. 1987-ஆம் ஆண்டு முனைவர் பட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட நூல் இது.