Description
உடல் உழைப்பைத் தவிர வேறெதனையுமே அறிந்திராத மக்கள் கூட்டமாக, இரு நூற்றாண்டுகாலமாய் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மலையகச் சமூகத்திலிருந்து கல்வித் தீபமேந்தி, அறியாமை இருளை அகற்ற முன்னின்று உழைத்த பெருமக்களின் வரலாற்றைத் தொகுத்துக் கூறும் நூல் இது.
மலையகத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழர்கள் குடியேற்றப்பட்டதன் 200ஆவது ஆண்டான இந்த ஆண்டில் (2023) வெளிவரும் இந்நூல், மலையகத் தமிழர்கள் குறித்த வரலாற்று ஆவணமாகவும் திகழ்கிறது.