மெய்தி இன மக்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் தொடர்ச்சியாக, ஓராண்டுக்கும் மேலாக எரிந்துகொண்டும் புகைந்துகொண்டும் இருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் சிக்கலை விளக்கும் நூல். மணிப்பூரின் வரலாற்று நிகழ்வுடன் இந்தியாவுடன் இணைந்த காலத்தில் நேரிட்ட விளைவுகளையும் விளக்கும் நூலின் ஆசிரியர், பழங்குடி சமூகங்கள் எவ்வாறு பிளவுண்டிருக்கின்றன என்பதையும் தெளிவுபடுத்துகிறார். மக்களைக் கட்டுப்படுத்தக் கூடியதான ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் மணிப்பூரில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது என்பதை விவரிப்பதுடன் சிறப்பாகச் செயல்படுத்த யோசனையும் முன்வைக்கப்படுகிறது. ‘இன்னர்லைன் பெர்மிட்’ என்ற அரசியல் சிக்கல் பற்றி விவரிக்கப்படுவதுடன், மணிப்பூரின் சமூகப் பிரச்னைகளின் பெரும் பகுதி இனப் பிரச்னைகளிலிருந்து உருவாகின்றன; இனப் பிரச்னைகளை நிர்வாக நடவடிக்கை, சட்டங்களால் தீர்க்க முடியாது என்றும் குறிப்பிடப்படுகிறது. மெய்தி, குக்கி, பைட் உள்பட பல்வேறு இனக் குழுக்களின் மோதல்களை விவரிக்கும் ஆசிரியர், இவற்றுக்கு இடையே நடப்பது மதரீதியிலானவை அல்ல என்கிறார். போதைப் பொருளான ஓபியத்துக்கும் ஒரு பெரும் பங்கிருக்கிறது என்றும் மியான்மரும் சீனாவும் எவ்வாறு சம்பந்தப்படுகின்றன என்பதும் விளக்கப்படுகின்றன. வன்முறைகளால் உலகை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ள மணிப்பூர் சிக்கல் பற்றிக் குறிப்பிட்ட கோணத்தில் விவரிக்கும் நூல்.
மணிப்பூர் கலவரமும் பின்னணியும் – விதூஷ்
₹170
இன்னர்லைன் பெர்மிட்’ என்ற அரசியல் சிக்கல் பற்றி விவரிக்கப்படுவதுடன், மணிப்பூரின் சமூகப் பிரச்னைகளின் பெரும் பகுதி இனப் பிரச்னைகளிலிருந்து உருவாகின்றன; இனப் பிரச்னைகளை நிர்வாக நடவடிக்கை, சட்டங்களால் தீர்க்க முடியாது என்றும் குறிப்பிடப்படுகிறது. மெய்தி, குக்கி, பைட் உள்பட பல்வேறு இனக் குழுக்களின் மோதல்களை விவரிக்கும் ஆசிரியர், இவற்றுக்கு இடையே நடப்பது மதரீதியிலானவை அல்ல என்கிறார். போதைப் பொருளான ஓபியத்துக்கும் ஒரு பெரும் பங்கிருக்கிறது என்றும் மியான்மரும் சீனாவும் எவ்வாறு சம்பந்தப்படுகின்றன என்பதும் விளக்கப்படுகின்றன. வன்முறைகளால் உலகை இந்தியாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ள மணிப்பூர் சிக்கல் பற்றிக் குறிப்பிட்ட கோணத்தில் விவரிக்கும் நூல்.
- புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
- தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
- Worldwide Shipping
- புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
Weight | 0.25 kg |
---|