மாஹாளிபட்டி நடுகல் :
வகை : நடுகல்
இடம்: மாஹாளிபட்டி கிருதுமால் நதி கரையோரத்தில் மூன்று பக்கமும் நான்கு அடி உயர சுவர் கொண்ட சிறு அறையில் உள்ளது. கேட் காளி என்று அழைக்கப்படும் அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ளது.
காலம்: பொ.ஆ. 17 ஆம் நூற்றாண்டு
செய்தி ஒரு அடி உயர தனி சிற்பமான இந் நடுகல்லானது இடது கையை ஊரு முத்திரையுடன் வலது கையில் வாளினை தரையில் குத்திட்டவாறுசமபாத நிலையில் கீழ்நோக்கிய பார்வையுடன் இடுப்பில் அரை ஆடை அணிந்து மார்பில் வீரர்களுக்கே உரிய விர சங்கிலி அணிந்து, இடது பக்க வாட்டு கொண்டை தொங்கிய காதில் காதணிகள், கை வளையம் அணிந்தும் அமைதியான கோலத்தை காட்டும் விதமாக கீழ்நோக்கிய பார்வையுடன் காணப்படுகிறார். இவரை இப்பகுதி மக்கள் கருப்பசாமி என்றும் வழிபடுகின்றனர்.