மதுரை நாயக்கர் வரலாறு – அ.கி.பரந்தாமனார்

250

விஜயநகரப் பேரரசின் தோற்றம், கிருஷ்ண  தேவராயரின் ஆட்சிச் சிறப்பு, மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சியை இந்த நூல் விவரிக்கிறது.

Add to Wishlist
Add to Wishlist

Description

விஜயநகரப் பேரரசின் தோற்றம், கிருஷ்ண  தேவராயரின் ஆட்சிச் சிறப்பு, மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சியை இந்த நூல் விவரிக்கிறது. எளிய நடையில், தங்கு   தடையின்றி, அன்றைய அரசியல் நிலைப்பாடுகள், நெஞ்சை உலுக்கும் போர்கள் என, ஒரு நாவலுக்கே உரிய சுவாரசியத்துடன் செல்கிறது, இந்த நூல்.

திருமலை  நாயக்கர் மற்றும்  மங்கம்மாள் மரணம் பற்றி, இன்றும் மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் பல்வேறு கட்டுக்கதைகள் உலவும் நிலையில், திருமலை, தமது, 72  வயதில் இயற்கை மரணம் அடைந்தார் என்று அக்கட்டுக்கதைகளுக்கு இந்த நூல் முற்றுப்  புள்ளி வைத்துள்ளது. மேலும், மங்கம்மாள், தம் பேரன்  விஜயரங்க சொக்கநாதனால் சிறை வைக்கப்பட்டு இறந்தார் என்பதையும்  மறுத்துள்ளது.

தன் முற்றுகைக்கு உட்பட்ட கண்ணுார்  குப்பத்தில் உள்ள எதிரிநாட்டு  வீரர்கள், உணவு பற்றாக்குறையால், 14  நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தந்தை  வேண்டிய போது, அதை பெருந்தன்மையுடன்  ஏற்றுக் கொண்டான், ஹொய்சாள மன்னன்  மூன்றாம் வல்லாளன். ஆனால், மதுரை  சுல்தான் கியாஸ் உத் தீன் தம்கானி,  ஒப்பந்தத்தை மீறி, திடீரென  பெரும்படையுடன் வந்து,  மூன்றாம் வல்லாளனை கைது  செய்து, உயிருடன் தோலை  உரித்து, அந்தத் தோலில், வைக்கோல் நிரப்பி, மதுரை  நகர மதிலில் தொங்க  விட்டு மகிழ்ந்தான் (பக்.35).

Additional information

Weight 0.4 kg