முல்லைப் பெரியாறு தொடரும் தொல்லைகள்-கம்பம் அப்பாஸ்

200

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடும் விவசாயிகள் தலைவரான நூலாசிரியர் எழுதியுள்ள வரலாற்றுப் பதிவு இந்த நூல். நூறாண்டுகளுக்கு முன் அணை கட்டும் யோசனை ஏற்பட்டது பற்றியும் கர்னல் பென்னிகுயிக் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டார் என்பது பற்றியும் தொடக்கத்திலேயே தெரிவிக்கிறார் ஆசிரியர். அணையைச் சார்ந்த அன்றைய மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உருவான, இன்றும் பயன்பெறும் பாசன அமைப்புகளும் விளக்கப்படுகின்றன.

PAGE NO :288

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடும் விவசாயிகள் தலைவரான நூலாசிரியர் எழுதியுள்ள வரலாற்றுப் பதிவு இந்த நூல். நூறாண்டுகளுக்கு முன் அணை கட்டும் யோசனை ஏற்பட்டது பற்றியும் கர்னல் பென்னிகுயிக் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டார் என்பது பற்றியும் தொடக்கத்திலேயே தெரிவிக்கிறார் ஆசிரியர். அணையைச் சார்ந்த அன்றைய மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உருவான, இன்றும் பயன்பெறும் பாசன அமைப்புகளும் விளக்கப்படுகின்றன. அணை கட்டுமானப் பணியின்போது உயிரிழந்த ஆங்கிலேயர்களின் கல்லறைகள் பற்றிய தகவல்களையும் தருகிறார் ஆசிரியர். அணையின் வரலாற்றுடன் அதன் பாசனத் திட்டங்கள், பயன்பெறும் பாசனப் பகுதிகள் பற்றியெல்லாம் தொழில்நுட்ப விவரங்களையும் இணைத்தே தரும் நூலாசிரியர், தொடர்பான குடிநீர், மின்னுற்பத்தித் திட்டங்களையும் விவரிக்கிறார். 1978 ஜூலை முதல் வாரம் தொடங்கி மலையாள நாளிதழொன்றில், ‘முல்லைப் பெரியாறு அணை உடைபடும் அபாயம், நீர்க்கசிவு அதிகரிப்பு, இடுக்கி மாவட்டமே அழியும்’, என்று வெளியான தொடர் செய்திகள்தான் கேரள மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தித் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக மாற்றின. இதன் தொடர்ச்சியாக வைகோ உள்பட விவசாயிகளின் போராட்டங்கள், சட்டப் பிரச்னைகள், நீதிமன்ற வழக்கு விவரங்களை நேரில் கண்ட சாட்சியமாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். அணையைப் பற்றி முழுமையாகக் களத்தில் இருப்பவர் வழி அறிய உதவும் சிறந்த ஆவணம் இந்த நூல்.

Weight0.25 kg