நாவுக்கரசரும் நாவாய் நாயகரும் – ஆ.அறிவழகன்

150

நாவுக்கரசர் தமக்கு வந்த நோய் தீர இறைவனை வணங்கி தாம் பெற்ற இறையனுபவத்தை மக்கள் பெற்றுய்ய தொண்டரானார்! வ. உ.சி. தாம் தேடிய தேடலில் விழுந்த சுதேசிய வித்தை சிந்தையில் வைத்து, அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள் விடுதலை பெற வந்தே மாதரம் பிள்ளையானார்! இவ்வாறு பல்வேறு ஒப்பு நோக்கிய விளக்கங்கள். சைவத்தை பரப்பியதற்காக நாவுக்கரசருக்கும், சுதேசியத்தை வெள்ளையருக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்திய வ.உ.சி.க்கும் அளிக்கப்பட்ட தண்டனைகள் மிகக் கொடூரமான ஒற்றுமை கொண்டவை என இருவரின் வாழ்வில் ஒற்றுமைகளைப் பட்டியலிடுகிறது நூல். இரு நாயகர்களை மேன்மேலும் அறியச் செய்யும் அடர்த்தியான ஒப்பீட்டு நூல் இது.

Add to Wishlist
Add to Wishlist

Description

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாவுக்கரசரையும் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வ.உ.சி.யையும் ஒப்பு நோக்கி எழுதப்பட்ட நூல். இருவரின் வாழ்க்கையையும் ஒப்பிட்டு பார்த்தால் அதில் பல ஒற்றுமைகள் புலப்படும். சைவம் தழைக்கப் பாடுபட்ட சொல்லுறுதி கொண்ட உழவாரத் தொண்டர் திருநாவுக்கரசர் என்றால், அடிமை விலங்கை உடைத்தெறிய வீறுகொண்டு சுதேசி கப்பல் ஓட்டிய நெஞ்சுறுதி கொண்ட தீரர் வ.உ.சிதம்பரனார். உயிரை மாய்க்கின்ற துன்பங்கள் வந்த போதும் ஒழுக்கத்தையும் வீரத்தையும் விடாதவர்கள் நாவுக்கரசரும், வ.உ.சி.யும். அதை இருவரின் வாழ்விலும் நடைபெற்ற நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டி நூலாசிரியர் விளக்கியிருப்பது மிகச் சிறப்பு. நாவுக்கரசர் தமக்கு வந்த நோய் தீர இறைவனை வணங்கி தாம் பெற்ற இறையனுபவத்தை மக்கள் பெற்றுய்ய தொண்டரானார்! வ. உ.சி. தாம் தேடிய தேடலில் விழுந்த சுதேசிய வித்தை சிந்தையில் வைத்து, அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள் விடுதலை பெற வந்தே மாதரம் பிள்ளையானார்! இவ்வாறு பல்வேறு ஒப்பு நோக்கிய விளக்கங்கள். சைவத்தை பரப்பியதற்காக நாவுக்கரசருக்கும், சுதேசியத்தை வெள்ளையருக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்திய வ.உ.சி.க்கும் அளிக்கப்பட்ட தண்டனைகள் மிகக் கொடூரமான ஒற்றுமை கொண்டவை என இருவரின் வாழ்வில் ஒற்றுமைகளைப் பட்டியலிடுகிறது நூல். இரு நாயகர்களை மேன்மேலும் அறியச் செய்யும் அடர்த்தியான ஒப்பீட்டு நூல் இது.

Additional information

Weight0.25 kg