திராவிடர்கள் நன்கு அறிந்திருந்த பிரச்சாரம்தான் மால்கம் எக்ஸ் மேற்கொண்ட பிரச்சாரம். இங்கு அந்தப் பிரச்சாரத்தை நிகழ்த்தியவரின் பெயர் பெரியார்.
‘இன இழிவு ஒழிய இஸ்லாம் ஒன்றே வழி’ என பெரியார் விடுத்த அதே பிரகடனம்தான் மால்கம் எக்ஸ் விடுத்த அழைப்புமாகும்…
கேசியஸ் கிளே என்ற அடிமை ஒழிப்பு அரசியல்வாதியின் பெயரை வைத்ததால் மட்டும் இன இழிவு ஒழிந்து போய்விடவில்லை. ஆனால் முஹம்மது அலீ என முஸ்லிம் ஆன பின்பு அனைத்தும் மாறியது. அவரே குறிப்பிடுவது போல, ‘கேசியஸ் கிளே அடிமையின் பெயர். முஹம்மது அலீ விடுதலையின் அடையாளம்’.
குத்துச்சண்டை ஜாம்பவான் முஹம்மது அலீ பற்றி, அறியாத பலவற்றை அறிய தருகிறது இச்சிறுநூல் உதவும்.