இமாம் குலி (Imam Quli) என்ற ஏழையின் மகன் நாதிர் குலி (Nadir Quli) கி.பி. 1688இல் பிறந்தவர். தனது கடுமையான உழைப்பாலும் திறமையாலும் ஈரானின் (பாரசீகத்தின்) மன்னரானவர் நாதிர்குலி என்ற நாதிர்ஷா.
பாரசீக நெப்போலியன் என்று அழைக்கப்படும் நாதிர்ஷா இந்தியாவின் மீது 1739இல் படையெடுத்து வந்தான். டெல்லியில் பெரும் அழிவு ஏற்பட்டது. நாதிர்ஷா ஏன் வந்தான்? டில்லியில் என்னென்ன செய்தான் என்பதைச் சொல்லிடும் சிறுநூல் இது.