மூவேந்தர்களையும் அடக்கியாண்ட களப்பிர அரசர்கள் வலுக்குன்றிய நிலையில் அவர்களிடமிருந்து பாண்டிய நாட்டைப் பாண்டியர்கள் மீட்டார்கள், சேர நாட்டை சேரர்கள் மீட்டார்கள், ஆனால் சோழ நாட்டைப் பல்லவர்கள்தான் மீட்டார்கள்.
காஞ்சியில் இருந்துக்கொண்டே சீன அரசருக்கு உதவும் அளவுக்குப் பல்லவர்களின் படைபலம் இருந்தது. பல்லவர்களின் யானைப்படை, கப்பற்படையின் ஒரு பிரிவாக இயங்கியது.
பல்லவரின் கட்டடக் கலையை, சைவத்தின் தேவாரம் பாடிய மூவரும், வைணவத்தின் ஆழ்வார்களும் புறக்கணித்தனர்.
சமஸ்கிருதத்தை தமிழில் எழுதுவதற்கான கிரந்த எழுத்துகளை தமிழுக்குக் கொண்டு வந்தவர்கள் பல்லவர்கள். ‘பல்லவ கிரந்தம்’ என்று அந்த எழுத்துகள் அழைக்கப்படுகின்றன.
கணிகையர் முறை பல்லவர் ஆட்சியில்தான் தமிழகத்தில் அறிமுகமானது. இதுவே தேவரடியார் முறையின் தொடக்கம் ஆகும். பல்லவர் மற்றும் சோழர் காலத்தில் கோவில்களில் இருந்த தேவரடியார்கள் முழுமரியாதையோடு நடத்தப்பட்டனர். அவர்கள் பாலியலுக்கான நபர்களாகப் பார்க்கப்படவில்லை.