பர்வதராஜகுலம் (Parvatha Rajakulam) அல்லது செம்படவர் (Sembadavar) எனப்படுவோர் இந்திய மாநிலங்களான, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சோழ மண்டல கடற்கரையில் வாழுகின்ற ஒரு மீனவ சமூகத்தினர் ஆவர். இச்சமூகத்தினர் செம்படவர் என்னும் பெயரையே முதன்மையாக பயன்படுத்துகின்றனர்.
இச்சமூகத்தினர் மீன்பிடித் தொழிலை முதன்மையாக செய்து வருகின்றனர். இவர்கள் கடல் மற்றும் ஆறுகளில் மீன்பிடி வலையுடன் மீன் பிடிக்கின்றனர்.
இச்சமூகத்தினர் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சம்பூனி ரெட்டி என்ற பெயரில் உள்ளனர். இவர்களின் தோற்றம் குறித்து பல கோட்பாடுகள் உள்ளன, ஆனாலும் அவை பண்டைய காலங்களிலிருந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.