பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள்

80

Add to Wishlist
Add to Wishlist

Description

தமிழக நாட்டுப்புறவியல் கலைகளைத் தங்கள் தேவைகளுக்காகப் பெருமளவில் மீளாக்கம் செய்தவர்கள் பொதுவுடைமையாளர்களே. நாட்டுப்புறவியல் ஆய்வை அறிவியலளவிலான முறையியலின் மூலம் நிறுவியவரான நா.வானமாமலையும் பொதுவுடைமையாளரே. இதனால் நாட்டுப்புறவியல் துறை 20-ஆம் நூற்றாண்டில் நடுப் பகுதியிலிருந்து தமிழில் ஒரு முக்கியமான புலமைத் துறையாக உருப்பெற்றது.
தொடக்கத்தில் நாட்டுப்புறவியலில் ஆய்வு செய்ய முனைந்த வர்கள் சிலர் பின்னாளில் நாட்டுப்புற நிகழ்த்துக்கலைஞராகவும் மாறினர். அவர்களில் ஒருவர் தமிழகம் நன்கறிந்த நிகழ்த்துக் கலைஞர் கரு.அழ.குணசேகரன். அவர் பல்வேறு ஆய்வரங்குகளில் படித்த ஒரே பொருள் தொடர்புள்ள கட்டுரைகளை ‘பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள்’ என்ற தலைப்பில் நூலாக்கம் செய்துள்ளார். இந்நூலுக்குப் புலமை சான்ற நாட்டுப்புறவியல் அறிஞர் ஆ.சிவசுப்பிர மணியன் அணிந்துரை வழங்கியுள்ளார்.
இந்நூல் கட்டுரைகள் நாட்டுப்புற நிகழ்த்துக் கலைகளின் சமூகப் பின்புலம் குறித்து கவனத்தைக் குவிக்கின்றன. அதன் மூலம் அக் கலைகளின் வட்டார, சாதி, சடங்குத் தேவைப்பாடு ஆகியவற்றை எடுத்துக்காட்டுகின்றன. இந்நிகழ்த்துக் கலைகள் நவீன சமூக மாற்றத்தால் அடைந்திருக்கும் மாற்றங்களையும் எடுத்துக்கூறுகின்றன; இப்போதைய நாட்டுப்புறக் கலைகளின் பயன்பாட்டுத் தளங்களை விமர்சனத்திற்குள்ளாக்கி, புதிய தளங்களைக் காட்டுகின்றன.

Additional information

Weight0.25 kg