தெ.எத்தி ராஜ் | ஆய்வு கட்டுரை நூல் | பக்கங்கள்: 150 | விலை : 150 | காக்கை பிரதிகள் | மூன்றாம் பதிப்பு
புதுச்சேரியின் அடையாளங்களாக இருந்த புதுச்சேரி செயிண்ட் லூயி கோட்டை, மற்றும் அரியாங்குப்பம், கோட்டக்குப்பம், வில்லியனூர், வழுதாவூர், திருக்காஞ்சி, திருவதிகை, காரைக்கால், மற்றும் மாகியில் இருந்த கோட்டைகள் பற்றியும், அதன் வரலாறு பற்றியும் ஆய்வு செய்து அதற்கான புகைப்படங்களையும் தேடி எடுத்து நூலாக தொகுத்துள்ளார். ஒரு மிகப்பெரிய அனுபவம் கிடைக்கும். அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.
சங்க இலக்கியம் தொடங்கி அரிக்கமேடு உள்ளிட்ட அற்புதமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட புதுவையின் லூயி கோட்டை, வில்லியனூர் கோட்டை, அரியாங்குப்பம் கோட்டை, காரைக்கால் கோட்டை, மாகி கோட்டை உள்ளிட்ட பல்வேறு கோட்டைகளைப் பற்றிய வரலாறு, அமைப்பு, பலமுறை அழிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்ட சாதனைகளை வரலாற்றுக் குறிப்புகளுடன் படங்களுடன் விளக்கியுள்ளது நூலுக்குச் சிறப்பு சேர்க்கிறது.