புதுவை நாட்டுப்புறக் கதைகள் – திருநாகலிங்கம்

450

Add to Wishlist
Add to Wishlist

Description

தமிழகத்தில் நாட்டுப்புறவியல் வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாகும். நாட்டுப்புறவியல் ஐம்பதுகளில் முகிழ்த்து அறுபதுகளில் அரும்பி எழுபதுகளில் போதாகி எண்பதுகளில் மலர்ந்து மலராகி மணம் பரப்பி வருகிறது. தமிழகத்தில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக நாட்டுப்புறவியல் ஆய்வு வீறு கொண்டுள்ளது. பல்கலைக் கழகப் பாடப் பொருளாய், ஆய்வுப் பொருளாய் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

புதிய பரிமாணங்களைப் பெற்றுள்ளதோடு களங்களும் விரிந்துள்ளன. ஆய்வுகளும் நூல்களும் ஆய்வுக்கட்டுரைகளும் பெருகியுள்ளன. இந்நிலையில் டாக்டர் ஆ. திருநாகலிங்கம் அவர்கள் கள ஆய்வில் சேகரித்த நாட்டுப்புறக் கதைகளைப் ‘புதுவை நாட்டுப்புறக் கதைகள்’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார்கள்.

மானிடவியலும் நாட்டுப்புறவியலும் கள ஆய்வு சார்ந்த துறைகளாகும். கள ஆய்வின்றி நாட்டுப்புறவியல் துறையில் ஆய்வு மேற்கொள்ள இயலாது என கென்னத் கோல்ட்ஸ் டெய்ன் கூறுவது இங்குக் குறிப்பிடத்தக்கது. டாக்டர் ஆ. திருநாகலிங்கம் அவர்களது இத்தொகுப்பு நூல் வருங்கால ஆய்வுக்கு முதன்மைச்சான்று ஆதாரங்களாக (Primary Sources) அமையும் என்ற நிலையில் இந்நூல் நாட்டுப்புறவியலுக்குப் புது வரவாகும்.

நாட்டுப்புற இலக்கிய வகைகளில் நாட்டுப்புறக் கதையும் ஒன்றாகும். இஃது வாய்மொழியாகப் பரப்பப்படுவதாகும். மரபு வழிப்பட்டது. மூல ஆசிரியர் யாரென அறியவொண்ணாமையும் ஒருவித வாய்ப்பாட்டுக்குள் அடங்குவதும் நாட்டுப்புறக் கதையின் இயல்புகளாகும்.

மனித இன வரலாற்றில் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் கதையாகிறது. மனிதனின் ஆசைகள், அவலங்கள், தேவைகள், விருப்பு வெறுப்புகள், கனவுகள், கற்பனைகள் கதைகளாகின்றன. கதை சொல்வதும் கதை கேட்பதும் மனிதர் இயல்பு. ஆதி மனிதன் தன் அனுபவங்களை மற்றவர்களுக்குக் கதையாகக் கூற ஆரம்பித்ததே கதையின் தொடக்கம் என்பர். இயற்கை நிகழ்ச்சிகளுக்குக் காரணம் காணும் முயற்சி, அச்சவுணர்வு, வாழ்வியலில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளால் மக்கள் மனத்தில் நேர்ந்த பாதிப்பு, உயர்வு, தாழ்வு, அறம் உரைத்தல் முதலிய யாவும் கதைகள் தோன்ற காரணம் என்பர்.

கதைகளைப் புராணக்கதை, பழமரபுக்கதை, நாட்டுப்புறக்கதை எனப் பிரிப்பர். நாட்டுப்புறக் கதைகளை ஆண்டி ஆர்னேயின் வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஸ்டித்தாம்ஸன் அவர்கள் ஒவ்வொரு உட்பிரிவுக்கும் எண் இட்டு வகைப்படுத்தியுள்ளார். தமிழக நாட்டுப்புறக் கதைகளுக்கும் இத்தகைய வகைப்பாடு தொடர வேண்டும் என ஆசைப்படுகிறேன். வருங்கால ஆய்வு இவ்வாசையை நிறைவு செய்யும் என நம்புகிறேன்.

இந்திய நாடு கதை விளையும் நாடு. இந்தியர் கற்பனையில் விளைந்த கதைகள் கோடி கோடி. அவற்றில் பதிவானவை பல்லாயிரங்களே. அப்படிப் பதிவான பல்லாயிரங்களில் டாக்டர் ஆ. திருநாகலிங்கம் தொகுத்த இருபத்திரண்டு நாட்டுப்புறக் கதைகளும் அடங்கும்.

பொருளடக்கம் :

1) நாலு மந்திரி கதெ

2) ராஜமக(ன்) அன்னதானப் பலன் கேட்ட கதெ

3) ஆயிர ஆனய அண்ணா கவுத்துல கட்னவன் கதெ…

4) ஆம்படையா(ன்) பொண்டாட்டிக்கி புத்தி கொடுத்த கதெ

5)பூர்வச் சக்கரவர்த்தி கதெ

6) ஒரு திருடன் கதெ

7) மேனகா கதெ

8) ஒரு பரியாரி கதெ

9) ஒரு ரெட்டி கதெ

10) தவுட்டு செட்டி கதெ

11) தல வெடிச்சவன் கதெ

12) பக்காத் திருடன் கதெ

13) அர்ச்சினங் கதெ

14) மார்க்கண்டயன் கதெ

15) புள்ளையாரு தண்டன

16) கொடுத்த கதெ

17) ஒரு ராஜன் பொண்ணு கதெ

18) ராஜகுமாரனு(ம்) மந்திரிகுமாரனு(ம்) பொண்ணுபார்த்த கதெ

19) ஐயரு கதை

20) கலியுக(ம்) பொறந்த கதெ

21) புருஷன் இல்லாம புள்ளபெத்த கதெ

22) வேடுவ(ன்) ராணிய கடத்தன கதெ

23) நாத்தனாள கொடுமப்படுத்ன கதெ

24) ராஜா கதெ

25) ஒரு ஆயா கதெ
26) கொள்ளக்கூட்டத்துக்காரங்க கதெ

27) குடும்பக் கதெ

28) ஒரு பண்ணையாரு கதெ

29) பண்ணையாரு கதெ

30) வீரன் கதெ

31) கொரங்குபுள்ள கதெ

32) ஒரு முனிவரு கதெ.

33) பண்ணையாரு கதெ

34) கழுதைக் கதெ

35) குடும்பக் கதெ

36) வீரன் சுப்பன் கதெ

37) ஆண்நாயி பெண்நாயி கதெ

38) பட்டாளத்துக்கார(ன்) பெண்டாட்டி கதெ ….

39) ராஜா கதெ

40) ஒரு அரிசியில ஒம்பது பானச்சோறு ஆக்குன கதெ

41) புருஷன் பொண்டாட்டி கதெ

42) ராஜா ராணி கதெ

43) ஆம்படையான் பொண்டாட்டி கதெ

44) மாமியாரு மருமக கதெ

45) எலி கதெ

46) மோகினி கதெ

47) ஒரு ஏழ பிராமண(ன்) கதெ

48) கற்ப காமரம் பண்ணுன கதெ

49) ஒரு ராஜா கதெ

50) ஒரு ஆம்படையான் பொண்டாட்டி கதெ

51) கழுதக்கு தண்டனை கொடுத்த கதெ

52) கொசவரு சோசியம் பாத்த கதெ

53) ஒரு ராஜா கதெ

54) கொட்டப்பாக்கு கதெ

55) ஒருத்தன் பானையை பொத்த கதெ

56) தக்காளி கதெ

57) வெள்ளக்காக்கா கதெ

58) கப்புக் கதெ

59) காக்கா எலி கதெ

60) ஒரு ராஜா கதெ

61) ஒரு வாலி வழிபோக்கன் கதெ

62) புத்தி கெட்ட ராஜன் கதெ

63) ராஜா மந்திரி கதெ

64) ஒரு வண்ணாங் கதெ

65) கொசவரு விவசாயம் பாத்த கதெ

66) பிள்ளைங்க திறம அறிஞ்ச கதெ

67) ராஜா கதெ

68) மைக்கேலதாசி கதெ

69) தூண்டிமுள்ளு ராஜன் கதெ

70) ராஜா கதெ

71) தெய்வலோக பொண்ணு கதெ.

72) ராஜா கதெ

73) தாசி வூட்டுக்குப் போனவ(ன்) கதெ

74) சின்னவ பெரியவ கதெ

75) மாமியா மருமகள் கதெ

76) பொண்டாட்டிய ஆம்படையா கொலெ செஞ்ச கதெ.

77) நாய்க் கதெ

78) அசிங்கக் கதெ

79) விக்கிரமாதித்தன் கதெ

80) ஒரு ராஜன் கதெ

81) குடும்பக் கதெ

82) காந்தருவ கதெ

83) ராஜா கதெ

84) உழவன் கதெ

85) குடும்பக் கதெ

Additional information

Weight0.25 kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.