Description
சமகாலத்தில் வாழ்ந்த சமூகவியல் ஆய்வாளரான தொ.பரமசிவனிடம் பழகிய அனுபவங்கள் இனிமையானவை. உரையாடலை ஈர்ப்புக்குரிய கலையாக மாற்றியவர் அவர். ஆய்வாளரான அவர் தன்னைக் காண வருகிறவர்களிடம் தொடர்ந்து தீராத உரையாடலை நடத்திக் கொண்டே இருந்தார். பேசுவதில் உள்ள அளப்பரிய வேகம் எழுதுவதில் அவருக்கு அந்த அளவுக்கு இல்லாமல் போனது. இதுவரை வெளிவராத அவருடனான நேர்காணலும் சில கட்டுரைகளும் இணைந்த தொகுப்பு.