செஞ்சி நாயக்கர் வரலாறும் கலைகளும் – Nayaks of Gingee: The Arts and History

200

Add to Wishlist
Add to Wishlist

Description

செஞ்சி நாயக்கர் வரலாறும் கலைகளும்
முனைவர் கே.ஆர். இலட்சுமி

Pre-Order: wa.me/919786068908

தற்காலத் தமிழகத்தின் அடிப்படைப் போக்குகள் பலவற்றையும் கட்டமைத்த நாயக்கர் காலம் மிக முக்கி யத்துவம் வாய்ந்தது. மதுரை நாயக்கர் ஆட்சி சத்தியநாதய்யராலும், தஞ்சை நாயக்கர் ஆட்சி விருத்தகிரீஸ்வரராலும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

அவற்றையொட்டித் தமிழிலும் அ. கி. பரந்தாமன், மதுரை நாயக்கர் வரலாற்றை எழுதியுள்ளார். குடவாயில் பாலசுப்பிரமணியன், தஞ்சாவூர் நாயக்கர் வரலாற்றை எழுதியுள்ளார். ஆனால் வேலூர், செஞ்சி ஆகிய நாயக்கர் ஆட்சிகள் இதுவரை விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை.
ஆகவே, நாயக்க மன்னர்களின் முன்னோடியாக ஆட்சி செய்த விஜயநகர ஆட்சியில் இருந்து செஞ்சி நாயக்கர்களின் ஆட்சியின் அரசியல் வரலாறும், சமூக, கலை, பண்பாட்டு வரலாறுகளும் இந்நூலில் எழுதப்பட் டுள்ளன.

நாயக்கர் என்னும் சொல் ‘நாயக’ என்னும் வட சொல்லின் திரிபாகும். இச்சொல் முதலில் தலைவன் என்னும் பொருளில் வழங்கி வந்து பின்பு படைத்தலை வனைக் குறிக்கலாயிற்று. விஜயநகரப் பேரரசில் இச்சொல், அதன் பகுதிகளாய் இருந்த மதுரை, தஞ்சை, வேலூர், செஞ்சி ஆகியவற்றை ஆட்சி செய்தவர்களைச் சிறப்பாக குறிக்கலாயிற்று.

செஞ்சி பகுதியின் ஆட்சி வரலாற்றை, வரலாற்று ஆசிரியர்கள்,
* சமணர்கள் வாழ்விடம் – கி. மு. 2ஆம் நூற்றாண்டு முதல் கி. பி. 6 ஆம் நூற்றாண்டு வரை
* பல்லவ மன்னர்கள் -கி.மு.6 ஆம் நூற்றாண்டு முதல் கி. பி. 900 வரை
* சோழர்கள், ராஷ்டிரகூட – கி. பி. 900 முதல் கி. பி. 1103 மன்னர்கள் வரை
* பாண்டிய மன்னர்கள் – கி. பி. 1014 முதல் கி. பி. 1190 வரை
* கோனார் பரம்பரையினர் – கி. பி. 1190 முதல் கி. பி. 1330 வரை
* விஜயநகர மன்னர்கள் -கி. பி. 14 ஆம் நூற்றாண்டு முதல்
* நாயக்க மன்னர்கள் -கி. பி. 1509 முதல் கி. பி. 1529 வரை

இந்த நாயக்க மன்னர்களின் ஆட்சியாண்டுகளிலே வளமைமிக்க நீண்ட உயர கோட்டைச் சுவர்களையும் அதிநுட்ப சிற்ப வேலைகளைக் கொண்ட உயர்ந்த கோபுரங்களும், கோயில்களும் கட்டப்பட்டன.

* முகம்மதியர் ஆட்சி -கி. பி. 1649 முதல் கி. பி. 1677 வரை
* மராட்டியர் ஆட்சி -கி. பி. 1677 முதல் கி. பி. 1697 வரை
* பிரெஞ்சு ஆட்சி -கி. பி. 1750
* ஆங்கிலேயர் ஆட்சி -கி. பி. 1761
என வகைப்படுத்தியுள்ளனர்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் செஞ்சி நாயக்க மன்னர்களால் வளர்க்கப் பெற்றுள்ள கட்டக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, இலக்கியக் கலை ஆகிய நுண்கலைகள் குறித்த தகவல்களைத் திரட்டி இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செஞ்சி நாயக்கர் ஆட்சியில், கட்டடம், சிற்பம், ஓவியம், இலக்கியம் ஆகிய கலை வளர்ச்சிக்கு செஞ்சி நாயக்கர்கள் அளித்த பங்களிப்பையும் விஜயநகர, செஞ்சி நாயக்கர்களின் பொருளாதாரம், அரசியல், படைகள், பண்பாடு, நம்பிக்கைகள், ஆடை அணிகலன்கள், சமுதாய மதிப்புகள், பெண்களின் நிலை ஆகியவற்றையும் விளக்கியுள்ளது.

ஆகவே, எல்லோரும் படிப்பதற்கு ஏற்ற வகையில் ”செஞ்சி நாயக்கர் வரலாறும் கலைகளும்” என்ற தலைப்பில் நேரடியாக செஞ்சி நாயக்கர்கள் ஆட்சிக்குட்பட்ட இடங்களுக்குச் சென்று, கள ஆய்வு செய்து இந்த நூலுக்குத் தேவையானச் செய்திகளையும் படங்களையும் மட்டும் வகைப்படுத்தி இதுவரை தனியாக எழுதப்படாத செஞ்சி நாயக்கர் வரலாறு, கலைகளைப் பதிவு செய்துள்ளது.

ஜே. ஆர். லட்சுமி

Additional information

Weight0.4 kg