Description
கோயில்கள் பற்றிய ஆய்வுகள் நிறைய இதுவரை செய்யப்பட்டுள்ளன. ஆயினும் பெரும்பாலும் அவ் ஆய்வுகள் கோயில்களை ஒரு சமய நிறுவனம் அல்லது கட்டக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றின் நிலைக்களம் என்றே நோக்கியுள்ளன. அதற்கு மாறாக இந்நூல் கோயிலை ஒரு சமூக நிறுவனம் என்ற நோக்கில் ஆராய்ந்து பல புதிய உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது. கோயில் நடவடிக்கைகளில் இடையர் மற்றும் பெண்களின் பங்களிப்பு, கோயில் நிர்வாகத்தில் உள்ளூர்ச் சமூகத்தின் பங்கு ஆகியவற்றை விரிவாக விளக்கியுள்ளார் ஆசிரியர்.