சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல் – மே.து.ராசு குமார்

320

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

சமூக, பொருளாதார, பண்பாட்டு மையங்களாக கோவில்கள் விளங்கியது பற்றிய வரலாற்று ஆதாரங்களுடன் எடுத்துக்கூறும் நுால். ஆய்வு நோக்கில் தொகுக்கப்பட்டுள்ளது.

சமய நம்பிக்கையுடன் கோவில்கள் வழிபடும் மையங்களாக விளங்குகின்றன. வரலாற்றில் இவை மக்களின் வாழ்வு சார்ந்த மையங்களாக விளங்கியதை எடுத்துக்காட்டுகிறது. கோவில் தொடர்பான உடைமைப் பிரிவினர் பற்றி விளக்குகிறது. அது சார்ந்த பணியாளர் பற்றியும் வெளிப்படுத்துகிறது.

விவசாயத்துடன் கோவில்களுக்கு இருந்த தொடர்பு, பண்பாட்டு கூடங்களாக விளங்கும் ஆதாரங்களை ஆய்வுப் பார்வையில் தருகிறது. கோவில்களை வரலாற்றுப் பார்வையில் அணுகியுள்ள நுால்.

சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல் – மே.து.ராசு குமார்

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று ஆன்றோர்கள் சொல்லியதற்கும் காரணம் உண்டு. கோயில் இருந்தால் திருவிழா நடக்கும். மக்கள் கூடுவார்கள். சந்தைகள், கடைகள் ஏற்படுத்தப்பட்டு வியாபாரம் நடக்கும். பலருக்கும் தொழில் கிடைக்கும். வருமானம் அதிகமாகும். இதை உணர்ந்தே மன்னர்கள் பெரிய கோயில்களைக் கட்டி வைத்து, அவற்றின் செயல்பாட்டுக்கு நிலங்களைத் தானமாக அளித்தனர்.

இதனால்தான் கோயில்கள் இன்றளவும் ஒரு நிறுவனமாக செயல்படுவதுடன் சிலநூறு குடும்பங்கள் அதனைச் சார்ந்து வாழ்ந்து வருகின்றன. இதை ஆதாரத்துடன் விளக்கும் புதிய சிந்தனையிலான ஆசிரியரின் படைப்புதான் இந்த நூல். கோயில்களுக்கு சோழர் காலத்தில் நிலம் வழங்கப்பட்டதன் பின்னணி, அரசின் பங்களிப்பு, கோயிலுக்கு எதிரான குற்றங்கள், கோயில் நில உற்பத்தியாளர்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் கோயில்களைப் பற்றியும் நிலவுடைமைப் பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் கல்வெட்டு ஆதாரங்களுடன் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

தொல்லியல் துறை சார்ந்த பணி அனுபவத்தோடு கல்வெட்டு ஆதாரங்களைத் தொகுத்து வடிவமைத்துள்ள இந்த நூலில் கோயில் நிலங்கள் யாருக்கு எந்த வகையில் பயன்பட்டன? அதனால் ஏற்பட்ட மீட்சி என்ன? என்பதையும் விளக்குகிறது. மேலும், இறைபணியில் ஈடுபட்டவர்களுக்கு எந்த அடிப்படையில் நிலம் தானமாக கொடுக்கப்பட்டது என்பதை சோழர்கால கல்வெட்டு ஆதாரங்களுடன் ஆசிரியர் விளக்கியுள்ளார்.”

சோழர் கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல் – மே.து.ராசு குமார்

பக்.228; விலை: ரூ.320; நியு செஞ்சுரி புக் ஹவுஸ்

Weight0.4 kg