தி.நா.சுப்பிரமணியன் கட்டுரைகள் (வரலாற்று கட்டுரைகள்) – பதிப்பாசிரியர் சு. இராஜகோபால்

450

தமிழகக் கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு இன்றும் அமரர் தி.நா.சுப்பிரமணியன் அவர்கள் குருவாகவும், குருக்களின் குருவாகவும் போற்றப்படுகிறார். அவரது கல்வெட்டுப் புலமையால் பெரிதும் ஈர்க்கப்பட்ட அமரர் ஐராவதம் மகாதேவன், 1998 ஆம் ஆண்டு தமிழகத் தொல்லியல் கழகத்தில் அவர் பெயரில் ஓர் அறக்கட்டளைச் சொற்பொழிவை நிறுவினார். இந்தச் சொற்பொழிவுகள் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தி.நா.சுப்பிரமணியன் அவர்களின் கல்வெட்டு ஆய்வுகள் மற்றும் எழுத்துக்கள், தமிழக வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளுக்கு மிக முக்கியமான அடித்தளமாக அமைந்துள்ளன.

Categories: , Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
Guaranteed Safe Checkout
Extra Features
  • We ship products within 3 to 7 business days, depending on availability.
  • Payments can be made via UPI, credit/debit cards through Razorpay, or direct bank transfer.
  • We ship our products securely. For any unavailable items, a refund will be issued for the corresponding amount.
  • We deliver across India and to international destinations.
  • Over 10,000 customers have trusted our service and expressed high satisfaction with their experience.
  • For bulk orders or any concerns, please contact us via WhatsApp or call at 9786068908.

தமிழகக் கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு இன்றும் அமரர் தி.நா.சுப்பிரமணியன் அவர்கள் குருவாகவும், குருக்களின் குருவாகவும் போற்றப்படுகிறார். அவரது கல்வெட்டுப் புலமையால் பெரிதும் ஈர்க்கப்பட்ட அமரர் ஐராவதம் மகாதேவன், 1998 ஆம் ஆண்டு தமிழகத் தொல்லியல் கழகத்தில் அவர் பெயரில் ஓர் அறக்கட்டளைச் சொற்பொழிவை நிறுவினார். இந்தச் சொற்பொழிவுகள் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தி.நா.சுப்பிரமணியன் அவர்களின் கல்வெட்டு ஆய்வுகள் மற்றும் எழுத்துக்கள், தமிழக வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளுக்கு மிக முக்கியமான அடித்தளமாக அமைந்துள்ளன.

சுதேசமித்திரன் நாளிதழ் வார மலர்களில் அவர் எழுதிய கட்டுரைகள், ஆழ்ந்த தமிழ், சமஸ்கிருத இலக்கியப் புலமையையும், நடுநிலையையும், பரந்த சிந்தனை ஓட்டத்தையும் வெளிப்படுத்துகின்றன. கல்வெட்டுத் தொன்மைச் சொற்களுக்கு வேர்ச்சொல் விளக்கம் அளிப்பதிலும், பழஞ்சொற்கள் திரிந்த விதத்தை பிற மொழிகளுடன் ஒப்பிட்டு விளக்குவதிலும் அவர் சிறந்து விளங்கினார். மானம் பேர்த்த கடுங்கோன், பாழியும் பூழியும், கேள்வியும் வேள்வியும் போன்ற சொல்லாடல்களுக்கு அவர் அளித்த விளக்கங்கள் அவரது நுட்பமான மொழி அறிவைப் பறைசாற்றுகின்றன. தனது ஊரான உடையாளூரில் உள்ள கிராம தேவதைகளின் வழிபாடு குறித்தும், ஆடி மாத நிகழ்வுகள் குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகள், சமூகவியல் மீதான அவரது ஈடுபாட்டைத் தெளிவாகக் காட்டுகின்றன.

தி.நா.சுப்பிரமணியன் அவர்கள் இந்திய-சீனப் போர்க் காலத்தில் சீனர்களின் தமிழக மற்றும் இலங்கைத் தொடர்புகள் குறித்து எழுதிய கட்டுரைகள், அவரது சர்வதேச வரலாற்றுப் பார்வையையும் தென்கிழக்கு ஆசியக் கல்வெட்டுகளிலும் வரலாற்றுச் செய்திகளிலும் அவர் கொண்டிருந்த ஆழமான ஈடுபாட்டையும் எடுத்துக்காட்டுகின்றன. இலங்கை அறிஞர் அமரர் கைலாசபதி, அவரை “தவம் புரிந்த கர்மயோகி” என்று பாராட்டியது, அவரது உழைப்பையும் அர்ப்பணிப்பையும் உணர்த்துகிறது. தி.நா.சுப்பிரமணியன் அவர்களின் எழுத்துக்களும் ஆய்வுகளும் வருங்காலத் தலைமுறை ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக அமைந்து, தமிழகத் தொல்லியல் சமூகத்திற்கு மேலும் பல ஆய்வுகளை முன்னெடுக்க உந்துசக்தியாகத் திகழ்கின்றன. அவரது புகழ் தமிழின் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

தி.நா.சுப்பிரமணியன் கட்டுரைகள் – பதிப்பாசிரியர் : சு. இராஜகோபால்

ஓய்.எஸ்.எஸ்.ஆர் நிறுவனம்,

பக்கங்கள் 356

விலை: Rs. 450

கட்டுரைத் தலைப்புகள்

1. சோழன் செங்கணான்
2. பாரி மகளிரும் வேளிர்குலமும்

3. எண்பேராயம்
4. சிவன்வாயல் சிம்ஹவர்மன்
5. பல்லவர் நடத்திய பரிவேள்வி
6. தர்ம மகாராஜன்
7. பப்ப பட்டாரகர்
8. பிரம்மராயன்
9. அபிமான சித்தி
10. வேசாலியர்
11. மானம் பேர்த்த கடுங்கோன்
12. பாழியும் பூழியும்
13. கேள்வியும் வேள்வியும்
14. மலைக்கொடி மன்னன்
15. மலயத்துவசன்
16. புத்த மதம் தழுவிய சோழமன்னன்
17. வீரசோழனும் வீரசோழியமும்
18. சமயமும் வேளையும்
19. சம்புகுலம்
20. விஜயபுரி இக்ஷ்வாகு மன்னர்கள்
21. கதம்ப குலம்
22. ஸைந்தவர்
23. பத்திரமுகம்
24. காவிரி பிறந்த கதை
25. கரிகாலனும் காவிரியும்
26. சம்பாபதி
27. காகந்தி 28. பவத்திரி
29. நாஞ்சில் வள்ளுவன்
30. காஞ்சிவாய்ப் பேரூர்
31. தொண்டி மாநகரம்
32. கொண்கானம்
33. வனவாசியும் வைஜயந்தியும்
34. பஸ்தரும் பொன்மழையும்
35. செந்தமிழ் வழங்கிய கற்கா நாடு 36. சீத நாடு
37. திராவிடமும் தமிழும்
38. குண்டலகேசியும் பிக்ஷஷு நாகசேனரும்
39. காளிதாசனும் தமிழ்நாடும்
40. மணல் கயிறு
41. நாகார்ஜுன நடுகல்
42. கும்பகர்ணேச்சுரம்
43. பிரம்மண்ய பகவானும் அவர் சிஷ்யரும்
44. கடல் கெழு செல்வி
45. கிரீசன்
46. மூல ஸ்தானம்
47. திருவடி
48. தெய்வத்தாய்மார்
49. சிரஞ்சீவியர் ஏழுபேர்
50. ஒண்ட வந்த பிடாரி
51. ஆடி மாதத்தில் அம்பிகை வழிபாடு
52. ஆடிப்பச்சை
53. ஆடி மாதத்தில் ஆற்றுக்கு வழிபாடு
54. பூஜையில் ஆடலும் பாடலும்
55. மோதிர விரல்
56. சித்திரமேழி
57. தமிழ்நாடும் யவனரும்
58. சேரர் வென்ற யவனர் நாடு
59. கிராதர்
60. வன்னிய மன்னர்
61. வன்னியரும் இலங்கை வரலாறும்
62. அளகேச்வரன்
63. உலக அரங்கில் தமிழ்
64. இலங்கையும் சீனரும்
65. சீனரின் பொறாமை
66. சீனர் விரும்பிய புத்தர் திருவடி
67. பரசுராமன் செல்லூர்
68. கவிர நாடும் கவிர மக்களும்
69. தாய்லாந்தில் தமிழ்க் கல்வெட்டு
70. சுவர்ணபூமி
71. பூர்வதேசம்
72. சிவனுக்குச் சொந்தமான வியட்நாம் தேசம்
73. சீனாவும் தமிழ்நாடும்
74. சீனர் பேசிய தமிழ்
75. வஜ்ரபோதியும் போதிசேனரும்
76. சீனவரலாற்றில் காணும் பல்லவ அரசர்கள்
77. சீனர்களின் ஜம்பம்
78. சீனர் ஜம்பத்தின் சிகரம்-நம்பமுடியாத கடிதம்
79. சீனர்-சோழர் உறவு: சில புதியவிவரங்கள்
80. சீனாவிலிருந்து வந்த செப்பு ஓடுகள்
81. சீனர் உதவி நாடிய தமிழக அரசன்
82. சீனத்துப் பிடாரி செங் ஹோ
83. நாற்கடலுக்கு ஒரு நாயகன்

இக்கட்டுரைகளின் ஆசிரியர் தி.நா சுப்பிரமணியன் குறித்து கலாநிதி க.கைலாசபதி அவர்கள் பூர்வகலாவில் முன்பு எழுதியது

“1930 ஆம் ஆண்டளவிலே எழுதத் தொடங்கிய தி.நா.சு. நூல்களைவிட, சஞ்சிகைகளுக்கு எழுதியுள்ள கட்டுரைகளும் கதைகளும் குறிப்புகளும் நூற்றுக்கணக்கானவை. ஆக்க இலக்கியத்திலாயினும் சரி, அறிவு இலக்கியத்திலாயினும் சரி, ஆய்வறிவுக்கும், உண்மைக்கும், நேர்மைக்கும் அவர் அளித்த முக்கியத்துவமே, இன்றைய தமிழ்நாட்டு ஆராய்ச்சியாளர் பெரும்பாலாரிலிருந்து அவரை வேறுபடுத்துகிறது.”

“ஆராய்ச்சி மொழி ஆங்கிலமே” என்றிருந்த காலத்தில் தி.நா. சுப்பிரமணியன் தனது நூலைத் தமிழில் எழுதி உதவினார்… தாய்மொழி மூலம் உயர்கல்வியும் ஆராய்ச்சிகளும் நடைபெற வேண்டும் என்று சுப்பிரமணியன் ஆரம்பத்திலிருந்தே கருதி வந்தமைக்கு இம்முயற்சியும் சிறந்த சான்றாகும்.”

“என்னை பொறுத்தவரையில் திரு. சுப்பிரமணியனது சிறப்பியல்பு அவரது நடுவுநிலைமையாகும். கடந்த முப்பது நாற்பது வருடங்களாகத் தமிழகத்து ஆய்வாளர் பலரை ஆட்டிப்படைத்து வரும் மனக்கோட்டங்களுக்கும் துவேஷங்களுக்கும் அப்பாற்பட்டவராய் ஒருபாற் கோடாமல் விடயங்களை நோக்கி ஆராய்ந்தார் அவர். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவராய் இருந்தபோதிலும் சமஸ்கிருத வெறி அவரிடத்துக் கிஞ்சித்தும் காணப்படவில்லை. அதைப்போலவே ஆராய்ச்சியைப் பொழுதுபோக்காய்க் கொண்டவராய் இருந்தபோதும் மேற்போக்காகக் கலையில் ஈடுபட்ட dilettante அல்லர். கண்டிப்பான அளவுகோல்களை கடைப் பிடிப்பவராய் விளங்கினார்; போலிப் பேச்சுப் பாவனையும் அவரிடம் இருந்ததில்லை.”

Weight0.4 kg